Thursday, January 29, 2015

ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு பதவி மற்றும் பதக்கங்கள் மீள வளங்கப்பட்டன!

Thursday, January 29, 2015
இலங்கை::அரசியலமைப்பின் 34வது சரத்துக்கு அமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். நேற்றைய தினம் இந்த பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், சரத் பொன்சேகா இழந்திருந்த அனைத்து வரப்பிரசாதங்களும் எத்தகைய சட்டரீதியான தடைகளுமின்றி பெற்றுக்கொள்ள இதன் மூலம் வழிவகுக்கப்பட்டுள்ளது.
 
பாதுகாப்பு அமைச்சு, ஜெனரல் சரத் பொன்சேகா 2010 ஆம் ஆண்டு இராணுவப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்கு முன் பறிக்கப்பட்ட நான்கு நட்சத்திர ஜெனரல் தரத்தை பெறவும், அவருடைய பதக்கங்கள், ஓய்வூதியம் மற்றும் அனைத்து இராணுவ சலுகைகளை பெற்றுக் கொள்வதற்கும் தகுதியுடைவர் என்பதை உறுதி செய்துள்ளது.
மேலும் ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களின் சேவைக் காலத்தின் போது பெற்றுக் கொண்ட ராண விக்கிரம பதக்கம் (ஆர்டபில்யூபி), ராண சூர பதக்கம் (எஸ்.பி), விஸிஸ்டா சேவா விபூஷனய ( விஎஸ்வி), உத்தம சேவா பதக்கம (யூ.எஸ்.பி.) போன்றவற்றை மீண்டும் அணிய முடியும் எனவும் அணுமதி வழங்கப்பட்டுள்ளது.
 
இவர் தனது பிஎஸ்சீ பட்டத்தினை இராணுவ கல்லூரியில் பெற்றுக் கொண்டதோடு உள் நாடு மற்றும் வெளிநாடுகளில் தனது தொழில் சார் பாடநெரிகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்தார.
இவர் 1970 பெப்ரவரி 05 இல் இராணுவத்தில் இணைந்து கொண்டு இலங்கை 1வது சிங்க படைப்பிரிவில் கடமையாற்றும் காலகட்டத்தில் 2/லெப்டினன்ட் ஆக நியமிக்ப்பட்டார் அத்துடன் அவர் 05.02.1973 அன்று லெப்டினன்ட் ஆக பதவி உயர்வு பெற்றார் அத்தோடு அதிகாரிகளுக்கான கமாண்டோ பாடநெறியை 1973 ஆம் ஆண்டு இந்தியாவில் வெற்றிகரமாக நிறைவு செய்த பின்னர் இலங்கை இராணுவக் கல்லூரியில் இணைந்து கொண்டு மேலதிக பயிற்சிகளை தியத்தலாவ இராணுவ பயிற்சிக் கல்லூரியில் மேற் கொண்டார்.
இதற்கிணங்க முப்படைகளின் முன்னாள் பிரதானியான சரத் பொன்சேகா அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் மன்னிப்பளிக்கப் பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார். சரத் பொன்சேகா வின் ஜெனரல் பதவி அவருக்கான வாக்குரிமை அனைத்தும் இதனூடாக மீண்டும் உரித்தாகிறது. அத்துடன் இனி சரத் பொன்சேகா முன்னாள் ஜெனரல் என அழைக்கப்படுவார் என்றும் அவருக்கு வாக்குரிமை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தை வெற்றிகொள்வதில் முக்கிய பங்காற்றியிருந்த முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, இறுதி யுத்தத்தின் போது இராணுவத் தளபதியாகக் கடமையாற்றியிருந்தார்.

No comments:

Post a Comment