
Tuesday, January 13, 2015
இலங்கை::கட்சியை இரண்டாகப் பிளவடையச் செய்ய எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் இல்லத்தில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றின் பின்னர் அங்கு குழுமியிருந்த இளைஞர் யுவதிகளிடம் பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நான் ஒருபோதும் அரசியலை விட்டு விலகப் போவதில்லை.
நான் நாட்டை விட்டு தப்பிச் செல்ல மாட்டேன். நாட்டு மக்களுக்காக நான் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.எனது வாழ்வில் வெற்றி தோல்வி என்பது சகஜமானது ஒன்றே. தோல்வியைப் பழகிக் கொள்ளாத சிலர் அங்கும் இங்கும் பாய்கின்றனர்.
நான் எதிர்நோக்கிய தோல்வி தற்காலிகமானதே. புதிய ஜனாதிபதியின் அரசாங்கத்தின் நடவடிக்கைகளை அவதானிக்கப்படும்.நாடு முழுவதிலும் வன்முறைகளும், பொய்யும் ஆட்சியாள்கின்றது. இந்த நிலைமையை மாற்றியமைக்க புதிய ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது தற்காலிகமாக ஓர் பின்னடைவேயாகும். மக்களின் உரிமைகளுக்காக போராடுவோம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்...
ஜனாதிபதித் தேர்தலின் போது அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள சூழ்ச்சி முயற்சிகளில் ஈடுபட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுத்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அவதானித்த பின் எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் வெற்றி உறுதியானதை அடுத்து அதிகாரத்தை அவரிடம் ஒப்படைக்க முன்வந்ததாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment