Tuesday, January 13, 2015

இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் உடனடியான புதிய உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா எதிர்பார்ப்பு!

Tuesday, January 13, 2015      
இலங்கை::இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் உடனடியான உறவுகளை வலுப்படுத்திற்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.
மனிதவுரிமைகள் மற்றும் உள்ளக பிரச்சினைகள் தொடர்பாக புதிய அரசாங்கம் தமது செயற்பாடுகளை மேற்கொள்ள முற்பட்ட போதும், உண்மையான சவால்களை எதிர்கொள்ள வேண்டி ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் இடம்பெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொண்டுள்ள அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஜோன் கெரி புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார்.
இதனிடையே, எதிர்காலத்திலும் இலங்கையுடன் தமது அரசியல் மற்றும் பொருளாதார கட்டமைப்புகளை வலுப்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாக ஜோன் கெரி குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க மாற்றத்தை ஏற்படுத்த இலங்கை பிரஜைகள் அமைதியான போக்கினை கடைபிடித்து வாக்குப்பலத்தை பயன்படுத்தியமையை அமெரிக்கா பாராட்டியுள்ளது.
எனினும், உள்ளக விடயங்களில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு இன்னமும் சவால் நிறைந்த சூழ்நிலையே நிலவுவதாக அமெரிக்கா ராஜாங்க செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment