Saturday, January 10, 2015

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக பிஎம்யுடி பஸ்நாயக்க!

Saturday, January 10, 2015
இலங்கை::சூழல் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றிய பிஎம்யுடி பஸ்நாயக்க பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமிக்கப்படலாம் என ஊகங்கள் வெளியான நிலையிலேயே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.

பஸ்நாயக்க இலங்கை நிர்வாக சேவையை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை பாதுகாப்பு அமைச்சு ஜனாதிபதியின் நேரடிக்கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment