Friday, January 16, 2015
இலங்கை::இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடலோரங்கள் ஊடாக கஞ்சா கடத்தலை கட்டுப்படுத்துவதற்காக இம்மாதத்திலிருந்து விசேட கடலோர பாதுகாப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக இளவாலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.மஞ்சுல.டி.சில்வா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, வடமாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் வழிகாட்டலிலும், உதவி பொலிஸ் அத்தியட்சகர் டி.நந்தன ரணவீரவின் மேற்பார்வையிலும் இந்த பாதுகாப்பு பணி முன்னெடுக்கப்படுகின்றது.

பொலிஸார் தேர்தல், ஏனைய கடமைகளுக்கு செல்லுகின்ற சந்தர்ப்பங்களை, கஞ்சா கடத்தல்காரர்கள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கடல் மார்க்கமாக கஞ்சாவை கடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து, மாதகல் துறை பகுதியில் இருந்து வலித்தூண்டல் வரையில் இரண்டு பொலிஸ் குழுக்கள் விசேட ரோந்துப்பணியில் தேர்தல் காலங்களில் ஈடுபடுத்தப்பட்டனர். இரவு நேர ரோந்துப்பணிக்கு, இராணுவத்தினரின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 4 கோடி 55 இலட்சத்து 3ஆயிரம் ரூபாய் பெறுமதியான 227 கிலோ 515 கிராம் நிறையுடை கஞ்சா கடந்த வருடத்தில் (2014) மட்டும் இளவாலைப் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.�
இளவாலை பொலிஸாரால் அதிகளவு கஞ்சா கைப்பற்றப்பட்ட ஆண்டாக கடந்த ஆண்டு காணப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் மாதகல் துறைப்பகுதிக்கு நுழையாத வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடற்றொழில் சமாசங்களின் ஊடாக கஞ்சா கடத்தலில் ஈடுபடுவர்களை இனங்காண்பதற்குரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதியில் சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுபவர்களை கைது செய்வதற்கு, சமாசங்களின் ஒத்துழைப்பும் பெறப்பட்டுள்ளது. தேவையேற்படி இரவு நேரங்களில் வீதித்தடைகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனங்களை சோதனை செய்வததுடன், சந்தேகத்துக்கு இடமான முறையில் நடமாடுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கைக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பை பொலிஸார் வேண்டி நிற்பதுடன், கிராமங்களுக்குள் இடம்பெறும் கஞ்சா வியாபாரம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment