Friday, January 09, 2015
இலங்கைத் தமிழ்மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டலில், புதிய ஆரம்பத்துக்கான எதிர்பார்ப்போடு திரண்டு வாக்களித்துள்ளனர். தற்போதைய அரசினால் பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்த துன்பங்களுக்கு இடையிலும், பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், இந்தத் தேர்தலை ஆயிரக்கண்க்கான வாக்காளர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாற்றத்துக்கான குறியீடாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், இலங்கைத் தீவில் வாழும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடனும் சமத்துவமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்கின்ற நிலையான தீர்வைக் காணவும், ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைமைகளுடன் சேர்ந்து உழைக்க முன்வருமாறு புதிய ஜனாதிபதியை நாங்கள் கோருகின்றோம்.
அரசுக் கட்டைமைவு அதிகாரத்தில் தாங்களும் அர்த்தமுள்ள வகையில் பங்களித்தல் வேண்டும் என்ற இலங்கையின் பல்வேறுபட்ட மக்களின் அபிலாஷை மி எதிர்பார்ப்பு மி கவனிக்கப்படவேண்டும்.
இலங்கையின் நீதித்துறை விரைந்து சீரமைக்கப்படவேண்டியுள்ளது. இதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, 18 ஆவது திருத்தத்தை நீக்கி, சுயாதீன ஆணைக்குழு முறைமையை மீள ஏற்படுத்தி, சட்டத்தின் ஆட்சியின் மேன்மையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிசேனவை நாம் விசேடமாக வேண்டுகிறோம்.
இந்த அதிகார ஆட்சிப் பீடத்தின் மாற்றம் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அர்த்தமுள்ள பெறுபேறைத் தரவேண்டுமாயின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஆகியவற்றின் மீதான கெடுபிடிக் கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்படவேண்டும் எனக் கனேடிய தமிழர் பேரவை நம்புகின்றது.
சர்வாதிகாரத்தை முறியடித்து, நம்பிக்கையை உருவாக்கும் மாற்றத்தை ஏற்படுத்துவற்காக பல்வேறுபட்ட கருத்துநிலைப்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படமுடியுமானால், தமது மக்களின் அடித்தளத்தில் கிடக்கும் அபிலாஷைகளை மி ஆதங்கங்களை மி கவனித்துத் தீர்ப்பதற்காக அனைத்து சமூகங்களும் அதேபோன்று ஐக்கியப்பட்டுச் செயற்பட முடியும் என கனேடிய தமிழர் பேரவை கருதுகின்றது.
முன்னைய மனித உரிமை மீறல்கள் விடயத்தில் நீண்டகாலம் காத்துக் கிடக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு இந்தப் புதிய ஆரம்பம் மூலம் கிட்டியிருக்கும் சந்தப்பத்தை வாய்ப்பாகப் பயன்படுத்துவதற்கு கனேடிய தமிழர் பேரவை தொடர்ந்து சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றும்.
ஜனநாயக விழுமியங்கள் மற்றும் குடிமக்களுக்கான நியாயம், சமத்துவம், நீதி, கௌரவம், சுதந்திரம் ஆகியவை பேணப்படுகின்ற வகையில் ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்காக உழைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பணிக்கு எல்லாவிதத்திலும் உதவுவதற்கு கனேடிய தமிழர் பேரவை தயாராக உள்ளது மி என்று உள்ளது.
மிகநெருக்கமான போட்டி நிலையில் நடந்தேறிய இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டிய மைத்திரிபால சிறிசேனவுக்கு புலிகளின் கனேடிய தமிழர் பேரவை வாழ்த்துத் தெரிவித்துள்ளது.
சிறிசேனவின் இந்தத் தேர்தல் வெற்றி, மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் சர்வாதிகார வம்ச ஆட்சிக்கு முடிவு கட்டி, புதிய ஜனநாயக சகாப்தத்துக்கான வாய்ப்புக்குரிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கின்றது என்று குறிப்பிட்டுள்ள கனேடிய தமிழர் பேரவை இந்தத் தேர்தல் குறித்து மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
இலங்கைத் தமிழ்மக்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வழிகாட்டலில், புதிய ஆரம்பத்துக்கான எதிர்பார்ப்போடு திரண்டு வாக்களித்துள்ளனர். தற்போதைய அரசினால் பல ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டு வந்த துன்பங்களுக்கு இடையிலும், பல்வேறு அச்சுறுத்தல் நடவடிக்கைகளுக்கு மத்தியிலும், இந்தத் தேர்தலை ஆயிரக்கண்க்கான வாக்காளர்கள் அதிகம் எதிர்பார்க்கப்படும் மாற்றத்துக்கான குறியீடாகப் பயன்படுத்தியிருக்கின்றனர்.
இந்தப் புதிய ஆரம்பத்தின் உதயத்தில், இலங்கையின் அனைத்து சமூகங்களினதும் அபிலாஷைகளுக்கும் இடமளிப்பதன் மூலம் முழு நாட்டிலும் உண்மையான அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்த முன்வருமாறு சிறிசேனவை கனேடிய தமிழர் பேரவை கோருகின்றது.
தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளைத் தீர்க்கவும், இலங்கைத் தீவில் வாழும் அனைத்துப் பிரஜைகளும் கௌரவத்துடனும் சமத்துவமாகவும் நடத்தப்படுவதை உறுதி செய்கின்ற நிலையான தீர்வைக் காணவும், ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட தமிழ்த் தலைமைகளுடன் சேர்ந்து உழைக்க முன்வருமாறு புதிய ஜனாதிபதியை நாங்கள் கோருகின்றோம்.
அரசுக் கட்டைமைவு அதிகாரத்தில் தாங்களும் அர்த்தமுள்ள வகையில் பங்களித்தல் வேண்டும் என்ற இலங்கையின் பல்வேறுபட்ட மக்களின் அபிலாஷை மி எதிர்பார்ப்பு மி கவனிக்கப்படவேண்டும்.
இலங்கையின் நீதித்துறை விரைந்து சீரமைக்கப்படவேண்டியுள்ளது. இதற்காக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து, 18 ஆவது திருத்தத்தை நீக்கி, சுயாதீன ஆணைக்குழு முறைமையை மீள ஏற்படுத்தி, சட்டத்தின் ஆட்சியின் மேன்மையை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிறிசேனவை நாம் விசேடமாக வேண்டுகிறோம்.
இந்த அதிகார ஆட்சிப் பீடத்தின் மாற்றம் இலங்கைத் தமிழர்களைப் பொறுத்தவரை அர்த்தமுள்ள பெறுபேறைத் தரவேண்டுமாயின் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் பேச்சுச் சுதந்திரம், ஊடக சுதந்திரம், ஆகியவற்றின் மீதான கெடுபிடிக் கட்டுப்பாடுகள் உடனடியாக நீக்கப்படவேண்டும் எனக் கனேடிய தமிழர் பேரவை நம்புகின்றது.
சர்வாதிகாரத்தை முறியடித்து, நம்பிக்கையை உருவாக்கும் மாற்றத்தை ஏற்படுத்துவற்காக பல்வேறுபட்ட கருத்துநிலைப்பாடுகளை கொண்ட அரசியல் கட்சிகள் ஒன்றுபட்டு செயற்படமுடியுமானால், தமது மக்களின் அடித்தளத்தில் கிடக்கும் அபிலாஷைகளை மி ஆதங்கங்களை மி கவனித்துத் தீர்ப்பதற்காக அனைத்து சமூகங்களும் அதேபோன்று ஐக்கியப்பட்டுச் செயற்பட முடியும் என கனேடிய தமிழர் பேரவை கருதுகின்றது.முன்னைய மனித உரிமை மீறல்கள் விடயத்தில் நீண்டகாலம் காத்துக் கிடக்கும் நீதியை நிலைநாட்டுவதற்கு இந்தப் புதிய ஆரம்பம் மூலம் கிட்டியிருக்கும் சந்தப்பத்தை வாய்ப்பாகப் பயன்படுத்துவதற்கு கனேடிய தமிழர் பேரவை தொடர்ந்து சர்வதேச சமூகத்துடன் இணைந்து பணியாற்றும்.
ஜனநாயக விழுமியங்கள் மற்றும் குடிமக்களுக்கான நியாயம், சமத்துவம், நீதி, கௌரவம், சுதந்திரம் ஆகியவை பேணப்படுகின்ற வகையில் ஒரு நிரந்தரத் தீர்வை எட்டுவதற்காக உழைக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பணிக்கு எல்லாவிதத்திலும் உதவுவதற்கு கனேடிய தமிழர் பேரவை தயாராக உள்ளது மி என்று உள்ளது.

No comments:
Post a Comment