Tuesday, January 20, 2015

இலங்கை மீனவர்கள் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்!

Tuesday, January 20, 2015
சென்னை::இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்ததற்காக புழல் சிறையில் அடைக்கப்பட்ட 6 இலங்கை மீனவர்களும் நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கடந்த 14ம்தேதி இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான சி428 அபீக் என்ற ரோந்து கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போது இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக் கொண்டிருந்த 1விசைப்படகு மற்றும் 6 சிங்கள மீனவர்களை கடற்படை கைது செய்தது.
புழல் சிறையில் அடைக்கப்பட்ட அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக நாகப்பட்டினம் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

1 comment:

  1. http://www.worldcup2015livenews.com/
    http://www.valentinesday2015giftideas.com/
    http://www.republicday2015speech.com/

    ReplyDelete