Thursday, January 08, 2015
இலங்கை::ஜனாதிபதிக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வாக்களித்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் அமைக்கப்பட்ட வாக்களிப்பு நிலையத்திற்கு இன்றைய தினம் சென்ற அமைச்சர் அவர்கள் தமது வாக்கை பதிவு செய்துள்ளார்.

7 வது ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்.மாவட்டத்தின் பல்வேறு வாக்களிப்பு நிலையங்களுக்கு விஜயம் மேற்கொண்டார்.
யாழ்.மாவட்டத்தின் வாக்களிப்பு நிலையங்களுக்கு அமைச்சர் அவர்கள் இன்றைய தினம் (08) விஜயம் மேற்கொண்டார்.
வைத்தீஸ்வராக்கல்லூரி, ஒஸ்மானியா கல்லூரி, நாவாந்துறை றோமன் கத்தோலிக்க வித்தியாலயம், நாவாந்துறை சென்.நீக்கிலஸ் சனசமூக நிலையம், கொட்டடி நமசிவாய வித்தியாலயம், வண்ணார்பண்ணை நாவலர் மகாவித்தியாலயம் உள்ளிட்ட பல்வேறு வாக்களிப்பு நிலையங்களுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் பார்வையிட்டார்.
2015 ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு இன்று கிளிநொச்சியில் அமைதியாக நடைபெற்று வரும் நிலையில் பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்றக்குழுக்களின் பிரதித்தலைவருமான மு.சந்திரகுமார் இன்று காலை கிளிநொச்சி திருநகர் வடக்கு மாதர் கிராம அபிவிருத்திச்சங்க கட்டடத்தில் அமைந்துள்ள வாக்களிப்பு நிலையத்தில் தனது வாக்கினை பதிவு செய்தார். (படங்கள் இணைக்கப்பட்டுள்ளன)
இதையடுத்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர் கிளிநொச்சி மாவட்டத்தில் ஜனாதிபதித்தேர்தல் அமைதியாகவும் நீதியாகவும், சுதந்திரமாகவும், நடைபெற்று வருவதாகவும் மக்கள் தமது தலைவரை தெரிவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாகவும் குறிப்பிட்டதோடு மக்கள் தமது சுபீட்சமான எதிர்காலத்தையும் அபிவிருத்தியையும் கருத்தில் கொண்டு வாக்களித்துவருவதை உணரமுடிவதாகவும் குறிப்பிட்டார்.

No comments:
Post a Comment