Friday, January 16, 2015

வட மாகாண ஆளுநராக வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலர் பளிஹக்கார நியமிக்கப்பட்டுள்ளார்!

Friday, January 16, 2015
இலங்கை::இலங்கையின் வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சாராத ஒரு சிவிலியன் இன்று வியாழக்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் வெளியுறவுத் துறையின் முன்னாள் செயலர் பளிஹக்கார ஆளுநராக நியமிக்கப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது இணையத்தளத்தின் மூலம் அறிவித்துள்ளார்.
 
அங்கு ஆளுநராக இருக்கும் ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திரசிறிக்கு பதிலாக இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பளிஹக்கார முன்னர் ஜெனீவாவிலுள்ள ஐநா அலுவலகத்துக்கான பிரதிநிதியாக பணியாற்றியுள்ளார். அதேபோல் இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் குறித்த விவாதங்கள் ஐ.நாவில் நடைபெற்ற போது அரச தரப்பில் பங்கேற்ற குழுவிலும் இருந்துள்ளார்.
 
இலங்கையில் போருக்கு பின்னரான காலப்பகுதியில், முன்னைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட 'கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழுவில்' ஒரு உறுப்பினராகவும் இருந்தார்.

No comments:

Post a Comment