Friday, January 16, 2015

புலி பினாமி ஆனந்திக்கு சசிதரனுக்கு தொடர்ந்தும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தலாம்!

Friday, January 16, 2015
இலங்கை::புலி பினாமி ஆனந்திக்கு சசிதரனுக்கு தொடர்ந்தும் புலனாய்வாளர்களால் அச்சுறுத்தலாம் அத்துடன் இலங்கையில் மீண்டும் புலிகள் மூலம் கொலைகளை ஆரம்பதிபதர்க்கு அம்மணி ஆனந்தி முயற்சிகள்  மேற்கொன்ட்டு வருவதாக தெரியவருகின்றது.
 
தனக்கு தொடர்ந்தும் புலனாய்வாளர்கள் அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் (புலி பினாமி) ஆனந்தி சசிதரன். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது..
காணாமல்போனோரின் உறவினர்கள் பாப்பரசரை சந்திப்பதற்கும், பாப்பரசரின் ஆராதனைகளில் கலந்துகொள்வதற்காகவும் மடு திருத்தலத்திற்கு சென்றிருந்தனர். இவர்களுடன் காணாமல் போன புலிகளின் உறவினர் என்ற வகையில் நானும் எனது இரு குழந்தைகளும் மடு திருத்தலத்திற்கு நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை சென்றிருந்தோம்.
 
அன்றைய தினம் தட்சனாமருதமடுவில் தங்கியிருந்து மறுநாளான புதன்கிழமை காணாமல் போனோரின் உறவினர்களின் குழுவுடன் இணைந்து பாப்பரசரை சந்திப்பதற்கு எண்ணியிருந்தேன். எனினும் நான் இல்லாத சந்தர்ப்பத்தில் எனது வாகனம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் இது யாருடைய வாகனம் என எனது சாரதியிடம் கேட்டுள்ளனர். அவரும் எனது வாகனம் என சுட்டிக்காட்டியதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த புலனாய்வாளர்கள் எனது வாகனத்தை புகைப்படம் எடுத்ததுடன் சாரதியிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.எனத் தெரிவித்தார்.
 
இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பாக இலங்கையின் புதிய மற்றும் பழைய ஜனாதிபதிக்கும் அரசுக்கும் அழுத்தம் கொடுக்குமாறு புலி பினாமி அனந்தி சசிதரனால் பாப்பரசரிடம் நேற்றையதினம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment