Monday, January 19, 2015

வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்குவதாக கூறவில்லை: ரணில் தெரிவிப்பு!

Monday, January 19, 2015
இலங்கை::வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சியை வழங்கவிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்ததாக இந்திய ஊடகங்கள் நேற்று வெளியிட்ட செய்தியை பிரதமர் ரணில் மறுத்துள்ளார். 13 ஆம் திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுலாக்கவிருப்பதாக கூறியதை இந்த இணையத்தளம் திரிவுபடுத்தி வெளியிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
இலங்கை தொடர்பில் ஐ.நா விசாரணையை நடத்துவதற்காக நிபுணர் குழு ஒன்று நியமித்து விசாரணை நடாத்தி வருகின்றது. இந்தக்குழுவுடன் அரசு இணைந்து செயல்படுவதோடு, குற்றத்துக்கான தண்டனையை உள்நாட்டு சட்டதிட்டத்தின்படியே அணுகப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment