Monday, January 19, 2015

எம்மால் தான் முஸ்லிம்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இல்லாமல் போனது எனும் குற்றச் சாட்டை ஏற்க முடியாது: பொதுபல சேனா!

Monday, January 19, 2015
இலங்கை::எம்மால் தான் முஸ்லிம்களின் வாக்குகள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு இல்லாமல் போனது எனும் குற்றச் சாட்டை ஏற்க முடியாது என பொதுபல சேனாவின் செயலாளர் கலகொட அத்தேஞானசார தேரர்
தெரிவித்துள்ளார்.
 
மஹிந்த ராஜபக்ஷவின் தோல்விக்கு பொதுபல சேனா பொறுப்புச் செல்ல வேண்டும் என பல தரப்புக்களிலும் கூறப்படுவது குறித்து தேரரிடம் இன்றைய சிங்கள வார இதழொன்று வினவியபோதே இவ்வாறு கூறியுள்ளார்.
 
நாம் முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு எதிராவே செயற்பட்டோம். முழு பழங்குடி முஸ்லிம்களுக்கு எதிராகவல்ல.
மைத்திரிபால சிரிசேன கட்சி மாறியது எமது செயற்பாட்டினாலா? சம்பிக்க ரணவக்க எதிர்க் கட்சியுடன் சேர்ந்தது எமது செயற்பாட்டினாலா? இவ்வாறு குற்றம் சாட்டுபவர்களிடம் நாம் சில விடயங்களுக்கு காரணம் கேட்கின்றோம். வடக்கின் வாக்குகள் முழுமையாகக் கிடைக்காமல் போனதும் எம்மினாலா?
 
நாம் கணக்குப்  போட்டுக் காட்டுகின்றோம். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பௌத்தர்களின் வாக்குகள் அனைத்தும் சுத்தமாக கிடைத்துள்ளது. இது நாம் இருந்ததனால் தான் கிடைக்கப் பெற்றது.
 
வேலையை சரியாகச் செய்யாத கட்சியின் தொகுதி அமைப்பாளர்களே இந்த தோல்விக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டியர்கள். கட்சிக்கு வெளியில் போன்று கட்சியின் உள்ளேயும் சூழ்ச்சிகள் இடம்பெற்றமை ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய ஒன்றாகும்.
 
பௌத்தர்கள் கட்சி ரீதியில் பிரிந்து செல்லாமல் நாடு என்ற காரணத்தை வைத்து ஒன்றுபடுமாறு நான் கேட்டுக் கொள்கின்றேன். சிங்கள தலைவர்கள் பிரிந்திருப்பதன் விளைவை எதிர்கால சந்ததியினர் ஈடுகொடுக்க வேண்டியிருக்கும் எனவும் தேரர் மேலும் கூறியுள்ளார்.  

No comments:

Post a Comment