Monday, January 19, 2015

இரட்டை குடியுரிமை பெற்றுக் கொண்ட பசில், கோதா தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் சட்டத் திருத்தம் ?

Monday, January 19, 2015
இலங்கை::முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ, பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ உள்ளிட்டவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியாத வகையில் புதிய அரசாங்கம் சட்டத் திருத்தங்களை செய்யவுள்ளதாக தெரியவருகிறது.
 
அதற்கமைய இரட்டை குடியுரிமை பெற்றுக் கொண்டவர்கள் எதிர்வரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விரைவில் சட்டத் திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகக் நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியக்கிடைக்கிறது.
 
அதேவேளை மக்கள் விடுதலை முன்னணியும் இரட்டை குடியுரிமை பெற்றுக் கொண்டவர்களை எதிர்வரும் காலங்களில் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்க வேண்டாம் என அரசை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment