Monday, January 19, 2015
இலங்கை::கிழக்கு மாகாண ஆட்சியைத் தக்க வைப்பதில் முன்னைய ஆளும் தரப்பினர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
இலங்கை::கிழக்கு மாகாண ஆட்சியைத் தக்க வைப்பதில் முன்னைய ஆளும் தரப்பினர் மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சி இடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கிழக்கு மாகாண சபை தேர்தலின் பின்னர் தலா இரண்டரை வருடங்கள் என்ற ரீதியில் முதலமைச்சர் பதவியை பகிர்ந்து கொள்ளும் உடன்பாட்டில் முஸ்லிம் காங்கிரசும், அன்றைய ஆளுங்கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணக்கம் கண்டிருந்தன. இதன் பிரதிபலனாக முதல் இரண்டரை வருடங்களுக்கு முதலமைச்சராக நஜீப் ஏ. மஜீத் நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த இரண்டரை வருடங்கள் நிறைவடைந்த நிலையிலும் அவர் தனது பதவியை விட்டுக் கொடுக்கத் தயாரில்லாத நிலையில் , முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவும் முஸ்லிம் காங்கிரஸை தொடர்ந்தும் ஏமாற்றும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்.
இதன் காரணமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்தர ராஜபக்ச தரப்பில் இருந்து முஸ்லிம் காங்கிரஸ் அகன்று செல்லக் காரணமாக அமைந்தது.
இந்நிலையில் தற்போது எஞ்சியுள்ள காலத்துக்கான முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசிற்கு விட்டுக் கொடுப்பதன் மூலம் கிழக்கு மாகாணத்தின் ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முயற்சிகளை முன்னெடுத்துள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் நாட்களில் முஸ்லிம் காங்கிரஸ் இணக்கப்பாட்டுடன் தற்போதைய கிழக்கு மாகாண ஆட்சி தொடர்வதற்கான சூழல் ஏற்பட்டுள்ளதாக மாகாண சபையின் கல்வி அமைச்சர் விமலவீர திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment