Thursday, January 08, 2015
இலங்கை::மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்கள் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூத் மற்றும் கிழக்கு மாகாண அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் ஆகியோர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப் பதிவில் ஈடுபடாது தவிர்ந்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் அமைச்சர் பஷீர் சேகுதாவூதின் வாக்கு ஏறாவூர் அல்-அஸ்ஹர் மகளிர் உயர்தர பாடசாலையிலும் அமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமதின் வாக்கு ஏறாவூர் அறபா வித்தியாலயத்திலும் பதிவுசெய்யப்பட வேண்டியிருந்தபோதிலும் இவர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைதரவில்லை.
இறுதிக்காலகட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்தது.
இதையடுத்து பஷீர் சேகு தாவூத் அமைச்சுப் பதவியை இராஜினாமாச் செய்தார். எனினும் கிழக்கு மாகாண அமைச்சர்கள் எவரும் தமது பதவியை இராஜினாமா செய்யவில்லை. அத்துடன் குறித்த அமைச்சர்கள் எவரும் தேர்தல் பிரசாரத்திற்கான எந்தவொரு பணியிலும் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-------------------------------------------------------------------------------------------------------
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் திடீர் சுகயீனம் காரணமாக வாக்களிப்பு நடவடிக்கையில் ஈடுபடவில்லை என தெரிய வந்துள்ளது.
நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பொது எதிரணி வேட்பாளராக போட்டியிட்ட மைத்திரிபாலவுக்கு ஆதரவளித்த சம்பந்தன் திருகோணமலை புனித மேரிஸ் கல்லூரியில் வாக்களிக்க இருந்த நிலையில் திடீர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதற்கு கொழும்புக்கு வந்துள்ளதால் அவருக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க முடியாமல் போயுள்ளது.

No comments:
Post a Comment