Tuesday, January 20, 2015
சென்னை: மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, ஜெயலலிதாவை நேரில் சந்தித்து பேசினார்.
இது தொடர்பாக தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறியது, ஊழல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றவரின் ஒருவர் வீட்டிற்கே சென்று மத்திய நிதி அமைச்சர், அவரைச் சந்தித்துள்ளது,
ஜனநாயக நாட்டின் சரித்திரத்தில் முதல் முறை.இவ்வாறு அவர் ஸ்டாலின் கூறினார்.
இதுதொடர்பாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது,
ஜனநாயக நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக மத்திய நிதியமைச்சர் ஒருவர் ஊழல வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு, சிறைத் தண்டனை பெற்றவரின் வீட்டிற்கே சென்று அவரை சந்தித்திருக்கிறார்.
இதை அவமானம் என்று அழைப்பது நடந்த நிகழ்வை மிகச் சாராரணமாக எடுத்துக்கொள்வது போலாகும். ஆனால், இதன்பிறகும் பாஜக தலைமை தாங்கும் மத்திய அரசுக்கு ஏதாவது நேர்மை மிச்சமிருக்கிறதா?
ஆட்சிக்கு வந்தால் தூய்மையான, ஊழலற்ற அரசைக் கொடுப்போம் என்று தேர்தல் நேரத்தில் இந்திய மக்களுக்கு பாஜகவினர் வாக்குறுதி கொடுத்தார்களே? அது இப்படி செயல்படுவதற்குத்தானா? இனி அடுத்தது என்ன செய்யப் போகிறார்கள்?
கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஊழல் வழக்கு மேல்முறையீட்டிலிருந்து ஜெயலலிதாவை விடுவிக்க ஒட்டுமொத்த மத்திய அரசும் செயல்படப்போகிறதா? இந்தக் கேள்விகளுக்கான பதில் தான் இப்போது தேவை. இவ்வாறு கூறியுள்ளார்.

http://www.worldcup2015livenews.com/
ReplyDeletehttp://www.valentinesday2015giftideas.com/
http://www.republicday2015speech.com/