Tuesday, January 20, 2015

BMICH இல் உள்ள ஆயுத களஞ்சிய சாலை திறக்கப்பட்டது!


Tuesday, January 20, 2015
இலங்கை::கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ள றக்ன லங்கா தனியார் பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுத களஞ்சிய சாலை சற்று முன்னர் பொலிஸாரால் திறக்கப்பட்டுள்ளது.
 
குறித்த பாதுகாப்பு சேவைக்கு சொந்தமான ஆயுதங்கள் சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடுகிடைத்ததையடுத்தே இக்களஞ்சியசாலை கடந்த சனிக்கிழமை சீல் வைக்கப்பட்டது.
 
பின்னர் கொழும்பு பிரதான நீதவானின் உத்தரவுக்கு அமைய குறித்த ஆயுத களஞ்சிய சாலை இன்று திறக்கப்பட்டு சேதனை நடவடிக்களை மேற்கொள்ளப்படுகிறது

No comments:

Post a Comment