Friday, January 23, 2015
இலங்கைமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் களங்கம் ஏற்படுத்த இடமளிக்க முடியாதென மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக குரோத அடிப்படையில் பொய் பிரச்சாரம் செய்யப்படுகின்றது.
கட்சியின் நன்மதிப்பை சீர்குலைக்கும் நோக்கில் போலிப் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது தேசிய அரசாங்கமொன்று அமைக்கப்படவில்லை.
உண்மையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமே ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றது. நூறுநாள் திட்டத்தின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை கைப்பற்ற நடவடிக்கை எடுக்கும். இதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சி சுதந்திரக் கட்சியின் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி வருகின்றது.
ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கமொன்றுக்கு ஆதரவளிக்கத் தயாரில்லை. எனது பதவியை பாதுகாத்துக்கொள்ள வாயை மூடிக்கொண்டு இருக்கப் போவதில்லை. ராஜபக்ஷவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குரோத உணர்வின் அடிப்படையில் செய்யப்படுகின்றது.
இந்த செயற்பாட்டுக்கு இடமளிக்க வேண்டாம் என கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவிடம் வேண்டுகின்றேன். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நானும் போட்டியிட உத்தேசித்துள்ளேன் என பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment