Friday, January 23, 2015

133 இராணுவ உயர் அதிகாரிகள் இடமாற்றம்: இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர!

Friday, January 23, 2015
இலங்கை::இலங்கை இராணுவத்தின் 133 உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புதிய இராணுவ ஊடகப் பேச்சாளர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார்.
 
28 பிரிகேடியர்கள், 33 கேர்ணல்கள், 54 லெப்டினன் கேணல்கள், 18 மேஜர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவ நியதிகளுக்கு அமைய ஓராண்டுக்கு இரண்டு தடவைகள் இடமாற்றங்கள் செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த நியதியின் அடிப்படையில் இராணுவத்தினர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஒரே இடத்தில் இரண்டு ஆண்டுகள் கடமையாற்றியவர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இராணுவத் தளபதியின் பரிந்துரைக்கு அமைய இந்த இடமாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 16ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றங்கள் அமுல்படுத்தப்பட உள்ளன.

No comments:

Post a Comment