Sunday, January 11, 2015
பாரீஸ்::பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் கடந்த புதன்கிழமையன்று சார்லி ஹெப்தா வார பத்திரிகை அலுவலகம் மீது 2 தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். இதில் பத்திரிகை ஆசிரியர்கள் உட்பட 12 பேர் பலியானார்கள். மறுநாள் சாலை போக்குவரத்து பணிகளை மேற்கொண்ட பெண் போலீஸ் அதிகாரியை தீவிரவாதிகள் சுட்டு கொன்றனர். கடந்த வெள்ளிக்கிழமை, வடக்கு பிரான்சில் உள்ள கோசர் சூப்பர் மார்க்கெட்டில் தீவிரவாதிகள் புகுந்து, அங்கு இருந்தவர்களை பிணைக் கைதியாக சிறை பிடித்தனர். அப்போது போலீ சாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 5 பேர் பலியானார் கள். 3 தீவிரவாதிகளும் சுட்டு கொல்லப்பட்டனர்.
பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்து வருவது குறித்து மக்கள் கவலையடைந்துள்ளனர். தீவிரவாதத்துக்கு எதிராகவும், பலியான 17 பேருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் நேற்று பிரான்ஸ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மக்கள் பேரணி நடத்தினர்.
பிரான்ஸ் நாட்டின் டல்லவுசி, மார்சிலே உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் ஒன்று திரண்டு பேரணி நடத்தினர். மக்களின் ஆக்ரோஷத்துக்கு மதிப்பளித்து, பிரான்ஸ் நாட்டில் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரமடையும் என்று பிரான்ஸ் உள்துறை அமைச்சர் பெர்னார்டு காசேநோவே கூறினார்.
பாரீஸ் நகரில் இன்று நடைபெறும் அஞ்சலி நிகழ்ச்சியில், அதிபர் பிராங்கோயிஸ் ஹோலன்டே கலந்து கொள்கிறார். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், ஜெர்மனி ஏஞ்சலா மெர்கல் உட்பட பல்வேறு நாடுகளின் பிரதமர்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கிடையில், இன்று நடைபெறும் மக்கள் பேரணியில் இஸ்லாமிய பெண் தீவிரவாதி ஹயாத் பவுமெடியேன், தாக்குதல்களை நடத்தலாம் என்று உளவு பிரிவுக்கு தகவல் கிடைததுள்ளது. இதனால் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment