Wednesday, January 07, 2015
இலங்கை::2015ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு தினம் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழ் மக்களின் மிகப் பெரிய அரசியற் கட்சியான தமிழ் தேசியக் கூட்ட மைப்பிற்குள் புதுப்புதுக் குழப்பங்கள் தோன்றிக்கொண்டு இருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை::2015ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னும் ஒரே ஒரு தினம் மட்டுமே இருக்கும் நிலையில் தமிழ் மக்களின் மிகப் பெரிய அரசியற் கட்சியான தமிழ் தேசியக் கூட்ட மைப்பிற்குள் புதுப்புதுக் குழப்பங்கள் தோன்றிக்கொண்டு இருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்வாறாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் தொடர்பாக நாளுக்கு நாள் வெளிவரும் புதிய தகவல்களால் மக்கள் மத்தியில் இந்த தேர்தல் குறித்த வெறுப்பும், தமிழ் கூட் டமைப்பின் முக்கிய தலைவர் கள் மீதான சந்தேகப் பார்வை களும் அதிகரித்து வருவதாகத் தெரிகின்றது.
இந்த தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பக்கச்சார்பற்ற நிலையையே எடுக்கும் என்றே அந்தக் கட்சியினரால் பெருவாரி யாக நம்பப்பட்ட பின்னணியில், திடீரென இந்தியாவிலிருந்து வந்திறங்கிய அதன் தலைவரான இரா.சம்பந்தன், எதிரணி யின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக் கும் முடிவைப் பகிரங்கமாக அறிவித்த பின்னர்தான் இந்த உள் தகவல்கள் பல வெளிவரு வதுடன், உள் முரண்பாடுகளும் வலுக்க ஆரம்பித்துள்ளன.
இலங்கை தமிழரசுக் கட்சி யின் மூத்த உறுப்பினர்களான பேராசிரியர் சிற்றம்பலம், மற வன்புலவு சச்சிதானந்தம் மற்றும் இளைஞர் அணி தலைவர் சிவ கரன் ஆகியோர் சம்பந்தனின் முடிவைப் பகிரங்கமாக எதிர்த் திருந்தனர். மைத்திரிபாலவுக்கு தமிழர்கள் ஆதரவு வழங்குவது உடனடியாகவும் நீண்ட கால அடிப்படையிலும் தமிழர்களுக் குப் பாதகத்தையே ஏற்படுத்தும் என அவர்கள் வாதிட்டனர். வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான ரவிகரன், குணசீலன் மற்றும் அனந்தி சசிதரன் ஆகியோரும் தமிழரசுக் கட்சியின் மேற்குறிப்பிட்ட மூத்த தலைவர்களின் பின்னால் அணிதிரண்டனர்.
ஆனால், வழமை போலவே, தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, அந்தக் கட்சியின் மூத்த தலைவர்களின் கேள்விகளுக்கு எந்தவொரு பொறுப்பான பதிலையும் அளிக்காமல் உதாசீனம் செய்துவிட்டார். இந்த நிலையில், ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிப்பதானது தமிழ் மக்களது அரசியற் தற்கொலைக்குச் சமமானது. எனவே, யாருக்குமே வாக்களிக்காமல் தமிழ் மக்கள் இந்த தேர்தலைப் பகிஸ்கரிக்க வேண்டும் என்று கூறிய அனந்தி சசிதரன், அது தொடர்பாகச் செய்தியாளர் மாநாடும் வைத்திருந்தார். பி.பி.சி. போன்ற சர்வதேச வானொலிகளுக்குப் பேட்டியும் வழங்கினார். அதனைத் தொடர்ந்து, அவரது இல்லத்தின் மீது நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலையில் சரமாரியான கல்லெறித் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சம்மதத்துடனேயே இந்த கல்லெறித் தாக்குதல் நடவடிக்கை திட்டமிடப்பட்டதாக கூட்டமைப்பு உள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஊரில் இல்லாத அந்த எம்.பிக்கு நெருக்கமாக இருக்கின்ற, தென்மராட்சி மற்றும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்கள் இருவரும், வலிகாமத்தைச் சேர்ந்த பிரதேச சபைத் தலைவர் ஒருவரும் இந்த தாக்குதல் நடவடிக்கையை ஒழுங்கு படுத்தியதாகவும் அந்த வட்டாரங்கள் தகவல் தருகின்றன.
மைத்திரிபால சிறிசேனவிற்கு பகிரங்க ஆதரவை தெரிவிப்பதற்கு முன்னதான, மூன்று வாரங்களாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இந்தியாவில் தங்கியிருந்தார். 2010ஆம் வருடத்தில் படித்த பாடத்தின் அடிப்படையில், சம்பந்தன் இம்முறை தேர்தல் தொடர்பில் பகிரங்கமான நிலைப்பாடு எதனையும் எடுக்க மாட்டாரென்றே கட்சிக்குள் பலரும் எண்ணியிருந்தனர். ஆனால், அவர் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய உடனேயே மைத்திரிக்கு பகிரங்க ஆதரவைத் தெரிவித்தார்.
ஆனால், தான் வெளியிடவுள்ள அறிக்கை தொடர்பில் தமிழரசுக் கட்சியின் முக்கிய தலைவர்களுடனோ அல்லது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுடனோ எந்தவொரு கலந்துரையாடலிலும் சம்பந்தன் அதுவரை ஈடுபட்டிருக்கவில்லை. அறிக்கை வெளியிடுவதற்கு முதல் நாள், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களை அழைத்துப் பேசி, ஷஷஆட்சிமாற்றத்திற்கு ஆதரவு தெரிவிக்குமாறு என்னிடம் கேட்கப்பட்டிருக்கின்றது. அதற்கு நானும் சம்மதித்து விட்டேன். 2015ஆம் ஆண்டில் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு நிச்சயமாகக் கிடைக்கும்|| என்று ஒரு கதையை கூறியிருக்கிறார்.
இதன் போது, சிவசக்தி ஆனந்தன், சுமந்திரன், சம்பந்தன், சித்தார்த்தன் ஆகியோருக்கு இடையில் பல வாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. இருந்தாலும், சுமந்திரனோ அல்லது சம்பந்தனோ தெளிவான விளக்கம் எதனையும் கூறவில்லை. தமிழர் பிரச்சினை தொடர்பாக எந்த ஒரு வாக்குறுதியையும் மைத்திரிபால தரப்பு தனக்குத் தரவில்லை எனவும் சம்பந்தன் அதன் போது தெரிவித்துள்ளார்.
மைத்திரிபாலவோடு ஏற்கனவே ஒரு கனவான் உடன்பாட்டிற்குச் சம்பந்தன் வந்திருந்த போதும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுக்கு அதுவரை எதுவும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை. ஆனால், சம்பந்தன் இந்தியாவில் இருந்த காலத்திலேயே, சுமந்திரன் எதிரணித் தலைவர்களுடன் நெருங்கிச் செயற்பட்டுக் கொண்டிருந்தார்.
இவ்வளவும் நடந்திருக்கின்ற போதும், கடந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, சுபாஸ் விடுதியில் தங்கியிருந்த 8 பேர் கொண்ட மைத்திரிபாலவின் பிரசார அணி மூலமாகத்தான் உண்மையான உட் தகவல்கள் பல கசிந்திருக்கின்றன. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் சிலரை அவர்கள் சந்தித்துக் கதைத்த போதே இந்த இரகசியத் தகவல்களை அவர்கள் வெளிவிட்டுள்ளனர்.
அவர்கள் வெளியிட்ட தகவல்கள் இவை தான்:
எழுத்தில் எதனையுமே கேட்டுப் பெறாமல் வெறுமனே ஒரு கனவான் உடன்பாட்டின் அடிப்படையில்தான் மைத்திரிபாலவை ஆதரிப்பதற்கு சம்பந்தனும் சுமந்திரனும் முடிவெடுத்திருக்கின்றனர். மாவை சேனாதிராஜா உட்பட, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேறு எந்த ஒரு தலைவருக்கும் தெரியாமல் இந்த விடயத்தை வைத்திருக்க இணக்கமும் காணப்பட்டுள்ளது. அந்த கனவான் உடன்பாட்டினை அவர்கள் சந்திரிகாவுடன் செய்திருக்கின்றார்கள்.
ஆனால், அதிர்ச்சிக்குரிய விடயம் என்னவெனில், இதில் ஊடாடிய பெருந்தொகைப் பணம்தான். (நூறு கோடி என்கிறார்கள்.) சம்பந்தன் இலங்கையிலிருந்து புறப்படும் போது, இங்கிருந்து தொடர்ந்தும் விடயங்களை நேரில் நின்று கையாளும் பொறுப்பை அவர் சுமந்திரனிடம் விட்டுச் சென்றுள்ளார். இதன் பின்னர் சுமந்திரனே அனைத்தையும் கவனித்திருக்கின்றார்.
இதற்காக, தனியாகவும் ஷகவனிக்க|ப்பட்டிருக்கிறது. (பத்துக் கோடி ரூபா கூடவே, கொழும்பு கிறகறிஸ் வீதியில் ஒர் உயர்தர வீடு. சுவிஸ் தூதரகத்திற்கு அருகாமையில் இந்த வீடு அமைந்திருக்கிறது.) இந்த கனவான் உடன்பாட்டின் ஒரு பகுதியாகவே, மைத்திரி அரசாங்கத்தில் தொடர்பாளருக்கு அமைச்சுப் பொறுப்பு வழங்கும் இணக்கப்பாடும் காணப்பட்டது.
இந்த கனவான் உடன்பாட்டுப் பேரம் பேசலுக்கு பின்னாலிருந்த உடன்பாடு என்ன என்பது பற்றியும் யாழ்ப்பாணம் வந்திருந்த மைத்திரிபாலவின் பிரசாரக் குழு தகவல்களை வெளியிட்டுள்ளது. வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழர்களிடமிருந்து குறைந்தது 5 இலட்சம் வாக்குகளும் கிழக்கு மாகாணத்திலிருக்கும் தமிழர்களிடமிருந்து குறைந்தது இரண்டரை இலட்சம் வாக்குகளுமாக, மொத்தம் ஏழரை இலட்சம் வாக்குகளை மைத்திரிபாலவிற்குத் தன்னால் பெற்றுத்தர முடியும் என்றும், அவ்வாறு பெற்றுத்தருவதற்குத் தான் பொறுப்பு என்றும் அவர் வாக்குறுதி வழங்கியிருக்கின்றார். இதை நம்பியே எதிரணியும் இந்தளவு சலுகைகளையும் வழங்கியிருக்கிறது.
ஆனால், கடந்த ஞாயிறு, திங்கட்கிழமைகளில் மைத்திரிபாலவின் பிரசார அணியினர் யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த போது, தங்களுக்குச் சொல்லப்பட்டது போல அல்லாமல், மக்கள் முற்றாகவே தேர்தலில் ஆர்வமற்று இருப்பதை தாம் கண்டறிந்து உள்ளதாகவும், தாங்கள் எதிர்பார்ப்பது போன்ற அளவு வாக்குகள் கிடைக்க வாய்ப்பில்லை என்று தாம் அறிந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்கள் உண்மையில் இரண்டு பிரதான வேட்பாளர்களிலுமே நம்பிக்கையற்றே இருக்கின்றார்கள் என்று பல தரப்பாலும் தமக்குச் சொல்லப்பட்டிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த எதிரணியினர் தொடர்பாளரை அழைத்து இது பற்றி விசாரித்திருக்கின்றனர். இந்த விசாரணையால் திக்குமுக்காடிப் போன கூட்டமைப்புத் தொடர்பாளர் தன்னைப் பாதுகாப்பதற்காக இரண்டு திட்டங்களை வகுத்திருக்கின்றார்.
ஒன்று, கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களான சுரேஷ் பிரேமச்சந்திரன், தருமலிங்கம் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் பிரசாரங்களில் ஈடுபடவில்லை. அவர்கள் தேர்தலை பகிஸ்கரிக்கின்றனர் என்பது போன்ற கதையொன்றை உருவாக்கி அதனை எதிரணியினரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றார்.
இரண்டாவது திட்டம் தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் இலகுவாக எடுபடக் கூடிய ஒன்றாக இருந்தது. அது தான், சக உறுப்பினர்களை அச்சுறுத்தி தாக்கிவிட்டு, அந்தப் பழியை இராணுவத்தினர் மீது போடுவது. தேர்தலைப் பகிஸ்கரிக்குமாறு தமிழ் மக்களுக்கு அழைப்பு விட்ட அனந்தி சசிதரனின் வீட்டின் மீது இனந்தெரியாத நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் செவ்வாய் அதிகாலை இடம் பெற்றுள்ளது.
இதற்கு யார் காரணம் என்று கோட்டால், அனைவரது பார்வையும் இலகுவாக சிறிலங்கா இராணுவத்தின் மீது செல்லக்கூடும். அவர்கள் போட்ட கணக்கும் இதுதான். ஷஷஇராணுவம் எமது உறுப்பினர்களைத் தாக்கிக் குழப்பங்களை ஏற்படுத்தியதால்தான் தமிழ் மக்களால் சுதந்திரமாக வாக்களிக்க முடியாமல் போய்விட்டது|| என்ற ஒரு பதிலை எதிரணியினரிடம் சொல்ல முடியும்.
இந்த உள் விடயங்கள் அனைத்துமே, கூட்டமைப்பின் ஏனைய தலைவர்களுக்கும் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர்களுக்கும் இப்போது தெரியப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ் மக்களின் வாக்குகளை வைத்து, சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் வியாபாரம் செய்திருக்கின்றனர் என்னும் தகவல் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர்களால் ஜீரணித்துக்கொள்ள முடியாமல் இருப்பதாகத் தெரிய வருகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு உள்ளிருந்து வெளிவருகின்ற இவ்வாறன அவநம்பிக்கையான தகவல்களால், தேர்தல் தொடர்பில் ஏற்கனவே ஆர்வமற்று இருக்கின்ற தமிழ் மக்கள், ஒருவிதமான வெறுப்பு நிலைக்குச் சென்றிருப்பதால் அதையிட்டு மூத்த தலைவர்கள் எரிச்சலுற்றிருப்பதாக தமிழரசுக் கட்சிக்குள்ளிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:
Post a Comment