Wednesday, December 10, 2014
இலங்கை::இந்திய கடற்படைக் கப்பல் "சுகன்யா" நல்லெண்ண விஜயத்தினடிப்படையில் நேற்று (09) கொழும்பு துறைமுகத்தினை வந்தடைந்துள்ளது.
துறைமுகத்தை வந்தடைந்த இக்கப்பலுக்கு இலங்கை கடற்படையினரின் பாரம்பரிய கலாசார மரியாதைகள் வழங்கப்பட்டு வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
அதன் பின்னர் "சுகன்யா" கப்பலின் கட்டளை அதிகாரி தளபதி எம்.டி. துரை பாபு, இலங்கை மேற்கு கடற்படை தளபதியும் பிரதேச துணை தளபதியுமான கே.ஜி.போல் அவர்களுக்கிடையிலான கலந்துரையாடலொன்றும் கொழும்பு மேற்கு கடற்படை தலைமையகத்தில் இடம்பெற்றது. இருவருக்குமிடையில் நல்லெண்ண கலந்துரையாடல்களும் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

No comments:
Post a Comment