Friday, December 5, 2014

இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Friday, December 05, 2014
இலங்கை::
தற்போது இலங்கைக்கு வருகை தருகின்ற சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துச் செல்கிறது. நவம்பர் மாதத்தில் மட்டும் சுற்றுலா பயணிகளின் வருகை 9.4 சதவீதத்தால் அதிகரித்து காணப்படுகிறது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது அதிக வளர்ச்சியை காட்டி நிற்பதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல் வெளியிட்டுள்ளது.
  
2013 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2014 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களில் வருகை தந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 20.3 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதுடன், இது 1,348,481 எண்ணிக்கையை சுட்டிநிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்துடன் ஒப்பிட்டு நோக்கும் போது 109,420 காணப்பட்ட எண்ணிக்கை தற்போது 119,727 ஆல் அதிகரித்து காணப்படுகிறது. மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்தே பெரும்பாலான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாகவும், கடந்த நவம்பரில் மட்டும் 423,130  எண்ணிக்கையிலான பயணிகள் மூலம் 13.7 சதவீத வளர்ச்சி நிலையை காட்டி நிற்கிறது.

வடஅமெரிக்க சுற்றுலாப் பயணிகளின் வருகை 11.4 சதவீதத்தால் வளர்ச்சியடைந்துள்ளதுடன், ஜனவரியில் இருந்து நவம்பர் வரையிலான காலத்தில் 62,769 பயணிகள் வருகை தந்துள்ளனர். கிழக்கு ஐரோப்பாவிலிருந்து 25.5 சதவீதமான 134,155 பயணிகள் வருகை தந்துள்ளனர். சீனாவில் இருந்து மட்டும்  117,766 எண்ணிக்கையிலான மக்கள் வருகையுடன் 137.6 சதவீதமான வளர்ச்சி நிலையை காட்டி நிற்பது விசேட அம்சமாகும்.

நவம்பர் மாதத்தில் மட்டும் 125.3 சதவீதமான பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. தெற்காசியாவிலிருந்து 13.4 சதவீதமும் இந்தியாவிலிருந்து 16.3 சதவீதமாகவும் வளர்ச்சியைக் காட்டி நிற்கிறது. அவுஸ்ரேலிய பயணிகளின் வருகை 8.4 சதவீதமாக காட்டியுள்ளது.

2014 ஆம் ஆண்டின் முதல் பதினொரு மாதங்களில் மட்டும் இலங்கை 1.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்க பெற்று
ள்ளதாகவும் அது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 31.4 சதவீத வளர்ச்சியை காட்டி நிற்பதாகவும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment