Friday, December 5, 2014

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது ஆபத்தானது: மஹிந்த சமரசிங்க!

Friday, December 05, 2014
இலங்கை::
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது ஆபத்தானது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

13ம் திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும் போது நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது மிகவும் ஆபத்தானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

13ம் திருத்தச் சட்டத்திற்கு எதிரான சிறந்த பாதுகாப்பு நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை என முன்னாள் பிரதம நீதியரசர் சுப்பையா சர்வானந்தா பகிரங்கமாக ஒருமுறைத் தெரிவித்திருந்தார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாகாண ஆளுனர்கள் மற்றும் பிரதம செயலாளர்களை தெரிவு செய்வதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு காணப்படுவதாகவும் இதன் மூலம் மாகாணங்கள் தன்னிச்சையாக இயங்குவது தடுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

நிறைவேற்று அதிகார பொறிமுறைமை இருந்திருக்காவிட்டால்  புலிகளுக்கு எதிராக யுத்தம் வெற்றிகரமாக முடிந்திருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேன ஒரே இரவில் ஆளும் கட்சியிலிருந்து விலகிச் சென்றிருக்க முடியாது எனவும், நீண்ட காலமாக எதிர்க்கட்சிகளுடன் இரகசிய தொடர்புகளைப் பேணிக்கொண்டே ஜனாதிபதியுடன் நெருங்கிப் பழகியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

2006ம் ஆண்டு கட்சித் தாவிய போது அது குறித்து ரணில் விக்ரமசிங்கவிடம் தாம் நேரடியாகவே கூறியதாக மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment