Saturday, December 6, 2014

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட முன்வந்தமை சர்வதேச சதித்திட்டம்: பொதுபல சேனா!

Saturday, December 06, 2014
இலங்கை::எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேன போட்டியிட முன்வந்தமை சர்வதேச சதித்திட்டம் என பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற அந்த அமைப்பின் கூட்டத்தில் அதன் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இதனை கூறியுள்ளார்.

போரில் வெற்றி பெற அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய தலைவருக்கு எதிராக 2010 ஆம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட சதித்திட்டம் இம்முறை முன்னெடுக்கப்படுகிறது.இன்று வைக்கப்பட்டுள்ள பொறியே அன்றும் வைக்கப்பட்டது.இதே எதிர்சக்திகள் அன்றும் செயற்பட்டன.

நாட்டை வெற்றிபெற செய்த தலைவருக்கு அவரே கட்டளைகளை வழங்கிய இராணுவ  தலைவர் சரத் பொன்சேகாவை ஜனாதிபதி எதிரணி வேட்பாளராக மாற்றினார்.

போரை வென்ற அணியில் இருந்து அதற்கு அரசியல் தலைமைத்துவத்தை வழங்கிய அரசியல் கட்சியின் செயலாளரே இன்று எதிரணி வேட்பாளராக போட்டியிட வைக்கப்பட்டுள்ளார். இதுவே இன்று முன்னெடுக்கப்படும் சதித்திட்டம் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment