Wednesday, December 17, 2014

சிங்கப்பூர் சென்ற எதிர்க்கட்சியினர் புலிகளின் டயஸ்போராவுடன் என்ன பேசினர்?: நிமால் சிறிபால டி சில்வா!

Wednesday, December 17, 2014
இலங்கை::மைத்திரி, சந்திரிகா, ரணில் கூட்டணியினர் சிங்கப்பூர் சென்றிருந்த காலத்திலேயே நாடு கடந்த புலிகளின் தமிழீழ அரசின் 9 பிரதிநிதிகளும் சிங்கப்பூர் வந்திருந்தனர். இங்கு என்ன நடந்தது என்பது தொடர்பான தகவல்களை நாட்டு மக்களுக்கு விரைவில் நாம் பகிரங்கப்படுத்துவோம் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
 
நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, கடந்த நவம்பர் மாத காலப்பகுதிக்குள் மைத்திரிபால சிறிசேன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, பாடலி சம்பிக்க ரணவக்க, திகாம்பரம், ரணில் விக்கிரமசிங்க, சரத் பொன்சேக்கா, மங்கள சமரவீர ஆகியோர் அடிக்கடி சிங்கப்பூர் சென்று வந்துள்ளனர். இவர்கள் அங்கு சென்ற காலப்பகுதிக்குள்ளேயே புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசின் அமைச்சர்களாக இருக்கும் 13 பேரில் 9 பேரும் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர்.
 
எனவே அங்கே என்ன நடந்திருக்கும்? சகல தகவல்களையும் திரட்டி வருகிறோம். எங்கே தங்கினார்கள்? யாரை சந்தித்தார்கள்? என்ன பேச்சுவார்த்தை நடைபெற்றது? போன்ற தகவல்களை திரட்டிக் கொண்டுதான் இருக்கிறோம். விரைவில் அனைத்து தரவுகளையும் திரட்டி நாட்டு மக்களுக்கும் ஊடகங்களுக்கும் பகிரங்கப்படுத்துவோம்.
 
இந்த நாட்டை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்லும் புலிகளின் டயஸ்போராவுடன் இணைந்து புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசுடன் இணைந்து டொலர்களுக்காக நாட்டை காட்டிக் கொடுக்கும் துரோகச் செயலை நாட்டு மக்களுக்கு பகிரங்கப்படுத்துவோம் என்று தெரிவித்தார் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா.

No comments:

Post a Comment