Monday, December 8, 2014

ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துக்கொண்டார்!


Monday, December 08, 2014
இலங்கை::ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்துக்கொண்டார்.
    
ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றியை உறுதிபடுத்தவே தாம் இவ்வாறு ஆளும் கட்சியுடன் இணைந்ததாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

2015 ஜனாதிபதி தேர்தலுக்காக வேட்பு மனுவை தாக்கல் செய்து விட்டு அலரி மாளிலைக்குச் சென்ற போதே ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, ஜனாதிபதியை சந்தித்தார். எதிர்வரும் ஜனாதிபதி தேரிதலில் ஜனாதிபதியின் வெற்றியை உறுதிப்படுத்த தாம் பாடுபடுவதாக இந்த சந்திப்பின் போது திஸ்ஸ அத்தநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை ,சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியின் பிரதி தலைவரான ஜயந்த கெட்டகொடவும் இன்று பகல் அலரி மாளிகையில் ஜனாதிபதியை சந்தித்து தேர்தலில் ஜனாதிபதியின் வெற்றிக்கு உதவுவதாக உறுதியளித்தார்.

பொதுச் செயலாளர் ஒருவர் போகும்போது பொதுச் செயலாளர் ஒருவரை எடுப்பது சிரமமான காரியமல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளராக இதுவரை காலமும் கடமையாற்றி வந்த திஸ்ஸ அத்தநாயக்க இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் இணைந்து கொண்டார்.


திஸ்ஸ அத்தநாயக்க ஆளும் கட்சிக்கு ஆதரவளிக்க எடுத்தத் தீர்மானம், ஐக்கிய தேசியக் கட்சியின் பாரிய பின்னடைவை பறைசாற்றி நிற்பதாகத் தெரிவித்துள்ளார்.


ஒரு செயலாளர் செல்லும் போது மற்றுமொரு செயலாளரை அழைத்து வருவது செப்படி வித்தை கிடையாது எனவும் தாம் செல்வது ஓர் அரசியல் பயணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


எவ்வாறெனினும் வருபவர்கள் வருவதற்கும் செல்பவர்கள் செல்லுவதற்கும் அரசாங்கத்தின் கதவுகள் இன்னமும் திறந்தே இருக்கின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


எதிர்க்கட்சி நபர்களை இணைத்துக் கொள்ளும்போது தாம் அரசியல் கட்சிகளை இணைத்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.


எதிர்க்கட்சி தனிப்பட்ட நபர்களின் நன்மதிப்பு மீது நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தாம் அரசியல் கட்சிகளின் கொள்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளார்!

சரத் பொன்சேகா தலைமையிலான ஜனநாயகக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள உள்ளார்.
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிற்கு இரண்டரை ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட காரணத்தினால் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கு ஜயந்தகெட்டகொட தெரிவு செய்யபட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
1991ம் ஆண்டு முதல் கடுவெல பிரதேச சபை, மேல் மாகாணசபை ஆகியவற்றின் உறுப்பினராக கடமையாற்றியுள்ளார்.

நீண்ட காலம் ஜனநாயகக் கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராக கடமையாற்றி வந்த ஜயந்த, அண்மையில் சரத் பொன்சேகாவுடன் இணைந்து அரசியல் நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

No comments:

Post a Comment