Friday, December 19, 2014

வியட்நாமுக்கு போர்க்கப்பல்களை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு!

Friday, December 19, 2014 
புதுடெல்லி: வியட்நாமுக்கு போர்க்கப்பல்களை ஏற்றுமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது.இந்தியாவில் உள்ள மேற்கு வங்கத்தில் கொல்கத்தாவை மையமாக வைத்து இயங்கி வரும் கப்பல் கட்டுமான நிறுவனமான கார்ட்ன் ரீச் ஷிப் பில்டர்ஸ் நிறுவனம் வியட்நாமுக்கு போர்கப்பல் ஒன்றை ஏற்றுமதி செய்ய உள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் மொரிஷீயஸ் நாட்டிற்கு பர்ரகுடா என்ற சுமார் ரூ.350 கோடி மதிப்புள்ள போர்க்கப்பலை ஏற்றுமதி செய்துள்ளது.இது தவிர சுமார் 3500 டன் எடையுள்ள சுமார் ரூ.2000 கோடி மதிப்புள்ள நீர்மூழ்கி கப்பல்களை கண்டறியக் கூடிய இரண்டு கப்பல்களை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு இந்த நிறுவனம் ஏற்றுமதிசெய்ய உள்ளது

.இதுகுறித்து முன்னாள் கடற்படை தளபதி ஏ கே வர்மா கூறுகையில், இந்திய ராணுவத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படடி சுமார் ரூ.630 கோடி மதிப்பில் 4 ரோந்து கப்பல்கள் வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ளது. இதன் மூலம் தெற்கு சீன பகுதியில் இந்திய கடற்படை வலிமை பெறும். மேலும் சீனாவின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.இந்த ரோந்து கப்பல்கள் சுமார் 35 மீட்டர் நீளமும், 10 மீட்டர் அகலமும் கொண்டவையாகும். இந்த கப்பல்கள்  மூலம் கடற்கரைக்கு நெருங்கி வந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட முடியும்.கப்பல்கள் ஏற்றுமதியை விரைவுபடுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டுள்ளதால் இன்னும் ஓராண்டிற்குள் மேலும் சில கப்பல்களை ஏற்றுமதி செய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment