Wednesday, December 03, 2014
இலங்கை::தேர்தல் மூலம் ஆட்சிக்கு வந்த ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்தை இரண்டு வருடங்களில் வீட்டுக்கு அனுப்பிய சந்திரிகா அம்மையார் இன்று ஜனநாயகம் பற்றி பேசுகிறார் என்று விவசாய அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தனா தெரிவித்தார்.வெலிகம நகர மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.தொடர்ந்து பேசிய அமைச்சர் கூறியதாவது:
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்டு இறுதியில் தமது கட்சியை காட்டிக் கொடுத்து, அக் கட்சியை படுபாதாளத்திற்கு இட்டுச் செல்ல முயற்சிக் கிறார்.மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் பதவியை விட்டுச் சென்றமை புதினமான செயலல்ல. இலங்கை வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் நிறைய இடம்பெற்றுள்ளன.

நாம் எல்லோரும் ஒன்றினைந்து செயற்பட்டால் அவர் விலகிச் சென்றமை எமக்கு ஒரு பொருட்டல்ல. 2001ம் ஆண்டில் சந்திரிகா பண்டார நாயக்காவின் அரசாங்கத்தி லிருந்து சிலர் விலகிச் சென்று ஐக்கிய தேசியக் கட்சி அர சாங்கத்தை அமைத்தார்கள் அச்சமயத்தில் அவருக்கு சக்தியைக் கொடுத்து கட்சியை காப்பாற்றினோம்.
இன்று அரசுக்கெதிராக வெளிநாட்டுச் சக்திகள் செயற்பட்டு வருகிறது. நாட் டில் நிலவிய கொடூர யுத்தத்தை முடித்து நாட்டில் அபிவிருத்தி யுகத்தை ஏற் படுத்திய நமது ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் செயற்பாட்டில் பொறாமைகொண்ட ஏகாதிபத்திய வாதிகளின் சதித்திட்டமே எதிர்க்கட்சிகளின் கூட்டு முன்னணியாகும்.என்றும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment