Wednesday, December 10, 2014
நாகை::நாகை மற்றும் காரைக்காலை சேர்ந்த மீனவர்கள் 43 பேரை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றுள்ள சம்பவம், மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினத்தை சேர்ந்த 18 பேர் இரண்டு விசைப்படகிலும், காரைக்காலை சேர்ந்த 25 பேர் மூன்று படகிலும் மீனவர்கள் நேற்று மீன்பிடிக்க சென்றனர்.
இந்திய கடல் எல்லையில் அவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர், 5 விசை படகுகளையும், அதில் இருந்த 43 மீனவர்களையும் சிறை பிடித்தனர்.
காகேங்சன்துறை கடற்படை முகாமுக்கு மீனவர்களை அழைத்து சென்றுள்ள இலங்கை கடற்படையினர், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே இலங்கை சிறையில் தமிழக மீனவர்கள் 38 பேர் இருந்து வரும் நிலையில், இன்று மேலும் 43 மீனவர்கள் சிறைப்பிடிக்கப்பட்டிருப்பது மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:
Post a Comment