Saturday, December 6, 2014

அமெரிக்க நிறுவனம் ஒப்பந்தம்: இந்திய கடற்படைக்கு 16 நவீன ஹெலிகாப்டர்கள்!

Saturday, December 06, 2014
புதுடெல்லி::அமெரிக்காவின் ‘சிகோர்ஸ்கை’ என்ற ஹெலிகாப்டர் நிறுவனம் இந்திய கடற்படைக்கு 6000 கோடி ரூபாயில் 16 நவீன ஹெலிகாப்டர்களை தயாரித்து கொடுக்க ஒப்பந்தம் பெற்றுள்ளது. இதற்கான டெண்டர் நேற்று திறக்கப்பட்டபோது இந்த ஒப்பந்தத்தை பெறுவதற்கு, இந்த ஒரு கம்பெனி மட்டுமே போட்டியில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

அகஸ்ட்டா வெஸ்லேண்ட்-ன் துணை கம்பெனியான பின்மெக்கானிக்கா இந்தியாவிற்கு வி.வி.ஐ.பி. ஹெலிகாப்டர் தயாரித்து வழங்க 3550 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்தது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை பெற இந்த நிறுவனம் லஞ்சம் கொடுத்தது அம்பலமானதையடுத்து இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்திய கடற்படைக்கு 16 மல்டி ரோல் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. அதில், அமெரிக்காவின் சிகோர்ஸ்கை என்ற நிறுவனமும், பின்மெக்கானிக்கா நிறுவனமும் டெண்டர் கோரியிருந்தது. ஆனால், இந்திய ராணுவ ஒப்பந்ததில் பின்மெக்கானிக்கா பங்கேற்க முடியாது என்பதால், போட்டியில் இருந்த ஒரே நிறுவனமான சிகோர்ஸ்கை நிறுவனம் வெற்றி பெற்று இந்த ஒப்பந்தத்தை பெற்றுள்ளது என்று பாதுகாப்புத் துறை அலுவலக தகவல்கள் கூறுகின்றன.

இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு சிகோர்ஸ்கையின் எஸ்-70பி சீஹாவ்க் ஹெலிகாப்படர் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்கும்.

No comments:

Post a Comment