Tuesday, November 18, 2014

முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவினால் எழுதப்பட்ட அதிஸ்டானய' நூல் ஜனாதிபதியிடம் கையளிப்பு!

Tuesday, November 18, 2014
இலங்கை::முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னாகொடவினால் எழுதப்பட்ட “அதிஸ்டானய” நூல் நேற்று (நவ.17) ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டது.
 
இந்நிகழ்வு, தாமரைத் தடாகம் மஹிந்த ராஜபக்ஷ மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மனிதாபிமான நடவடிக்கையின் போது அந்நடவடிக்கைகளை பொது மக்கள் தெரிந்துகொள்ள ஊடகம் பல்வேறு வகையில் பங்களிப்பு வழங்கியது. எனினும் அச்சந்தர்ப்பத்திற்கு கடற்படை எவ்வாறு முகம் கொடுத்தது என்பதை மக்களுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் விசேட விதமாக மாணவ மாணவிகளுக்கும் சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் அறிவை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் இப்புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
 
அமைச்சர்களான பந்துல குணவர்தன, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உட்பட முப்படைத் தளபதிகள், பாதுகாப்பு பிரிவுகளின் உயரதிகாரிகள் மற்றும் நூலாசிரியரின் குடும்பத்தினர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment