Tuesday, November 18, 2014

வைகோ மீது இந்திய இறையாண்மைக்கு எதிரா தேசதுரோக வழக்கு விசாரணை தள்ளிவைப்பு!

Tuesday, November 18, 2014
சென்னை: தேசதுரோக வழக்கில், ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, நேற்று, நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த, 2008ம் ஆண்டு, சென்னை பாரிமுனையில், ராஜாஅண்ணாமலை அரங்கில், ம.தி.மு.க.,வின் சார்பில், 'இலங்கையில் நடப்பது என்ன' என்ற தலைப்பில், கருந்தரங்கு நடந்தது.
 
இதில், வைகோவின் பேச்சு,புலிகளுக்கு  ஆதராவாக 'தேசதுரோக குற்றம், இந்திய இறையாண்மைக்கு எதிரானது' என, தமிழக அரசின் சார்பில்,சென்னையில், மூன்றாவது கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில், வழக்கு தொடரப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது.
 
வழக்கில், வைகோ நேற்று ஆஜரானார். விசாரணை அதிகாரி மணிவண்ணனிடம்,வைகோ தரப்பில், குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையை, டிச.11ம் தேதிக்கு, நீதிபதி கயல்விழி தள்ளிவைத்தார். நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த வைகோ, நிருபர்களிடம் பேசும் போது,''என் மீது போடப்பட்ட இந்த வழக்கில், அதிக தண்டனையாக, ஆயுள் தண்னை கிடைத்தாலும் கவலைப்படமாட்டேன்'', என்றார்.

No comments:

Post a Comment