Monday, November 17, 2014

சிவாஜிலிங்கத்தைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும்: அமைச்சர் விமல் வீரவன்ச!

Monday, November 17, 2014
இலங்கை::வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார், ¨
 
தேசிய சுதந்திர முன்னணிக் கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்த ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சர் விமல் வீரவன்ச இவ்வாறு தெரிவித்தார்.
 
ரணிலா, கரு ஜயசூரியவா, அல்லது சஜித்தா, அர்ஜுனவா, சரத் என் சில்வாவா அல்லது சந்திரிக்கா பண்டார நாயக்காவா, யார் பொது வேட்பாளர்? எதிர்க் கட்சிகள் ஒரு நோக்கில் இருந்துகொண்டு இன்னும் முடிவு எடுக்காமல் திண்டாடுகின்றன.
 
மஹிந்தவுடன் எதிராக நிற்கக் கூடிய ஒருவர் இந்த எதிர்க் கட்சிக்குள் இல்லை என்றே நான் திட்டவட்டமாகச் சொல்வேன்.இந்த நாட்டை கட்டி எழுப்புகின்ற மஹிந்த ராஜபக்ஷவையும் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபயவையும் அவர்களது அதிகாரக் கதிரையில் இருந்து அகற்ற வேண்டுமென்று சில வெளிநாடுகள் நினைக்கின்றன. அத்துடன் என். ஜி. ஓ. காரர்களான ஜயந்த விக்கிரம ரட்ண, நிர்மலா சந்திரண போன்றவர்கள் நிதியைத் திரட்டி இந்த ஆட்சியை மாற்றுவதற்கு முயற்சிக்கின்றனர்.
 
இவர்களுக்கு சிறுபான்மை வாக்குகள் இருக்கின்றன. முற்று முழுதாக ஜனாதிபதி மஹிந்தவுக்கு உள்ள பெளத்த வாக்குகளை திசை திருப்புவதற்கே ஜனாதிபதி முறைமை ஒழிப்பு என்ற அணியின் கீழ் திரண்டுள்ளனர்.
 
ஐ. தே. கட்சி கடந்த 20 வருட கால மாக தோல்வியுற்றது. அவர்களுக்கு அதிகாரத்தை பிடிக்க வேண்டும். அதற்காக எதையும் அவர்கள் செய்யத் தயாராக உள்ளனர். பெளத்த மக்களது வாக்குகளை சிதரடிக்கவே இவர்கள் முயற்சிக்கின்றனர். அத்துடன் பெளத்த வாக்குகளை பெற்றுக்கொள்ள பெளத்த கட்சிகளையும் அரவணைத்துக் கொண்டுள்ளனர்.
 
இரா.சம்பந்தன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் மட்டுமல்ல முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெற்றுத் தருவதாக ரணிலிடம் பேசியுள்ளார். அவர் 6 க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை ரணில் விக்கிரமசிங்கவிடம் முன்வைத் துள்ளார். அவரது கோரிக்கை திவயின சிங்களப் பத்திரிகையில் முன்பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. வட கிழக்கில் உள்ள 15 ஆயிரம் இராணுவப் படைகளை அகற்ற வேண்டும். வட, கிழக்கில் சுயநிர்ணய சபை வழங்கப்படல் வேண்டும். என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளார்.
 
இந்தியாவில் இருந்து கொண்டு முதலமைச்சர் சி. விக் னேஸ்வரனும் இதேபோன்ற கருத்துக் களை தெரிவித்துள்ளார். சிவாஜிலிங் கமும் தான் ஆயுதக் குழுக்களில் இருக்கும் போது யாழ் தேவி புகையிரதத்திற்கு முதலில் குண்டு வீசியவன் நானே என்று சொல்லி யிருக்கின்றார். அரசாங்கம் சிவாஜி லிங்கத்தைப் பிடித்து சிறையில் அடைக்க வேண்டும். அவர் மேலும் வடக்கில் உள்ள சகல புத்தர் சிலைகளையும் அகற்ற வேண்டும் எனவும் தெரிவித்துள் ளார்.
 
ஜனாதிபதி முறைமையை நீக்கி இந்த அரசியல் அமைப்பை திருத்த வேண்டிய அவசியம் எங்களது கட்சிக்கு இல்லை. தற்போது அமுலில் உள்ள அரசியல் அமைப்பு 18 முறைகள் திருத்தி யமைக்கப்பட்டுள்ளது. ஆனால் எங்களது நிலைப்பாடு முழு அரசியல் அமைப்பையும் மாற்றியமைப்பதே என்றார்.

No comments:

Post a Comment