Tuesday, November 18, 2014

விளையாட்டுக் கழகங்களுக்கு பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாவினால் உபகரணங்கள் கையளிப்பு!

Tuesday, November 18, 2014
இலங்கை::மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு மற்றும்

கிழக்கின் உதயம் விஷேட வேலைத்திட்டத்தின் கீழ் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள விளையாட்டு கழகங்கள் மற்றும் சமூக சேவை நிறுவனங்கள், பள்ளிவாசல்கள் உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது. 
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் ஜனாபா நிஹாரா மௌஜூத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு உபகரணங்களை வழங்கி வைத்தார். 
 
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.முஹம்மட் றியாஸ், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் ஓட்டமாவடி பிரதேச இணைப்பாளர் எம்.கஸ்ஸாலி உட்பட திவிநெம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழகங்களின் பிரதிநிதிகள் என பலரும் பிரசன்னமாயிருந்தனர்.

No comments:

Post a Comment