Monday, November 17, 2014
இலங்கை::ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையை நிராகரித்த இலங்கை அரசாங்கம், விசாரணை திகதி நீடிக்கப்பட்டமையை தொடர்ந்தும் கண்டித்து வருகிறது.
இலங்கை::ஐக்கிய நாடுகளின் போர்க்குற்ற விசாரணையை நிராகரித்த இலங்கை அரசாங்கம், விசாரணை திகதி நீடிக்கப்பட்டமையை தொடர்ந்தும் கண்டித்து வருகிறது.
இந்தநிலையில் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு மேற்கொண்டுவரும் நியாயமற்ற விசாரணை நடவடிக்கையை கண்டிப்பதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது
அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் இந்த கண்டனத்தை இன்று ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுபினாய் நண்டியை சந்தித்து போது வெளியிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான விசாரணைகளுக்காக ஏற்கனவே ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் விசாரணைக்குழு, ஒக்டோபர் 30 என்ற காலவரைறையை குறிப்பிட்டிருந்தது.
எனினும் பின்னர் காலவரைறைக்கு பின்னர் கிடைக்கும் சாட்சியங்களும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று அந்தக்குழு குறிப்பிட்டுள்ளது. அத்துடன் சாட்சியங்கள் கிடைக்கப் பெறும் மின்னஞ்சல் முகவரியையும் விசாரணைக் குழு ஒக்டோபர் 30வுடன் மூடவில்லை.
இது நியாயமற்ற, ஏற்றுக்கொள்ள முடியாத நடைமுறையாகும்.
இதேவேளை விசாரணைகள் இடம்பெற்ற காலப் பகுதியில் சில உள்நாட்டு வெளிநாட்டு தரப்புக்கள் வெற்றுக் கடதாசிகளில் பொய்யான கையொப்பங்களுடன் சாட்சியங்களை சமர்ப்பிக்க முயற்சித்தன.
இதன்கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டார். ஒருவர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார்.எனவே குறித்த நியாயமற்ற செயல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று பீரிஷ், நண்டியிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

No comments:
Post a Comment