Thursday, November 20, 2014

தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் அபிலாஷைகளைப் பெறுவதற்கு போராட்டம், சத்தியாக்கிரகம் அவசியமில்லை: ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டு அனைத்தையும் பெறலாம்: சாணக்கியன்!

Thursday, November 20, 2014
இலங்கை::தமிழ் மக்களின் உரிமைகள், அரசியல் அபிலாஷைகளைப் பெறுவதற்கு போராட்டம், சத்தியாக்கிரகம் அவசியமில்லை
 
என்னைப் பொறுத்தவரையில் ஆளும் கட்சியுடன் இணைந்து கொண்டு அனைத்தையும் பெறலாம் என்ற நம்பிக்கையுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பட்டிருப்புத் தொகுதி அமைப் பாளர் சாணக்கியன் இராசமாணிக் கம் தெரிவித்துள்ளார்.
 
பட்டிருப்புத் தொகுதியில் அமைந்துள்ள களுமுந்தன்வெளி கிராமத்தில் செவ்வாய் கிழமை (18) ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கிளையை ஆரம்பித்து வைத்து மக்கள் மத்தியில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
களுமுந்தன்வெளிக் கிராமத்தின் தலைவர் தெ. சவுந்தரராசா தலைமையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கிராம பெரியோர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், அப்போதைய காலகட்டத்தில் என்னு டைய அப்பப்பா தமிழரசுக் கட்சியின் தலைவராக இருந்து
 
பல சத்தியாக்கிரக போராட்டங்களை நடத்தி தமிழ் மக்களின் உரிமைகளுக்காகப் போராடியி ருந்தார். அது அப்போதைய காலகட்டத் திற்குப் பொருந்தும். ஆனால் தற்போதைய காலகட்டத்திற்கு இவ்வா றான சத்தியாக்கிரகப் போராட்டங்கள் எதுவும் சரிவராது. தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களுக்கு அபிவிருத்தியூடாக அவர்களது உரிமையினைப் பெற தற்போது வழிபிறந்துள்ளது. அதுதான் அபிவிருத் தியூடாக உரிமைகளைப் பெறுவதாகும்.
 
எமது தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு போராட்டம், சத்தியாக்கிரகம் போன்ற வழி வகைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனைவிட தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தி போராடியும் இதுவரை உரிமை கிடைக்கவில்லை.
 
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்கின்ற அமைப்பினை நான் பயன்படுத்துகின்றேன். இந்தக் கட்சியிலிருந்து கொண்டு எமது தமிழ் மக்களின் அபிவிருத்திகளை மேற்கொண்டு வருகின்றேன். எமது மக்கள் கடந்த காலங்களில் பல பொருளாதார ரீதியான இழப்புக்களைச் சநதித்தவர்கள் எனவே தற்போதைய காலகட்டத்தில் தமிழ் மக்களை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும்.
 
தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திக் கட்சி ஆளும் கட்சியாக இருக்கின்றது. எனவே எமது மக்கள் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை ஆதரித்தால் மென்மேலும் பாரிய அபிவிருத்திகளை மேற்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment