Saturday, November 22, 2014
இலங்கை::பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் எதிர்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நேற்று மூடிய கதவுகளுக்குள் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
புதிய நகர மண்டபத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டின் பின்னர் இடம்பெற்ற இந்த சந்திப்பின்போது இரு கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது தொடாபாக ஆராயப்பட்டு பரஸ்பர இணக்கப்பாடொன்று எட்டப்பட்டுள்ளது.
சுமார் அரை மணித்தியாலமாக இடம்பெற்ற இந்த சந்திப்பின் பின்னர் ரணில்விக்கிரமசிங்க மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்பட்டதாக சிறிகோத்தா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இரு தரப்பினர் மத்தியில் இறுதி உடன்பாடுகள் எவையும் எட்டப்படாத போதிலும், முக்கிய அரசியல் தீர்மானங்களை எடுக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் ஜி20 குழுவும், செயற்குழுவும் மைத்திரிபால சிறிசேனாவிற்கான முழுமையான ஆதரவை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment