Wednesday, November 12, 2014
இலங்கை::எதிர்கட்சியினால் எந்தவொரு வேட்பாளரை களமிறக்கினாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அமோக வெற்றியை பெறுவார் என தெரிவித்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த, வேட்பாளர்; ஒருவரை தெரிவு செய்துகொள்ள முடியாமல் காலத்தை கடத்தி கொண்டிருக்கும் எதிர்க் கட்சியை பொதுமக்கள் எவ்வாறு நம்புவார்கள் எனவும் கேள்வியெழுப்பினார்.
இலங்கை::எதிர்கட்சியினால் எந்தவொரு வேட்பாளரை களமிறக்கினாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே அமோக வெற்றியை பெறுவார் என தெரிவித்த ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த, வேட்பாளர்; ஒருவரை தெரிவு செய்துகொள்ள முடியாமல் காலத்தை கடத்தி கொண்டிருக்கும் எதிர்க் கட்சியை பொதுமக்கள் எவ்வாறு நம்புவார்கள் எனவும் கேள்வியெழுப்பினார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியுமா என உயர்நீதிமன்றிடம் ஆலோசனை கேட்டிருந்தார். இந்நிலையிலஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று உயர்நீதிமன்றத்தின் 10 நீதியரசர்களும் ஏகமனதாக ஆலோசனை வழங்கியுள்ளனர். இதன் மூலம் எதிர்க்கட்சியினால் மேற்கொள்ளப்பட்டு வந்த பொய் பிரசாரங்களுக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி
ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி எதிர்வரும் 19 அல்லது 20 திகதிகளில் அறிவிக்கப்படலாம். அவ்வாறு அறிவிக்கப்படும் திகதியிலிருந்து 16 நாட்களுக்குள் வேட்புமனு கோரல் இடம்பெறும். இந்த வேட்புமனுத் தாக்கல் 30 நாட்களை தாண்டாது. வேட்புமனுத் தாக்கலின் பின்னர் 30 நாட்களுக்கு தேர்தல் பிரசாரங்கள் இடம்பெற்று தேர்தல் இடம்பெறும். இதேவேளை 60 நாட்களை தாண்டிச் செல்லாது.
பாப்பரசர் வருகை
பாப்பரசர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ள நிலையில் ஜனாதிபதி தேர்தலானது பாப்பரசரின் வருகைக்கு முன்னர் நடைபெற கூடிய சாத்தியமும் உள்ளது. பாப்பரசரின் வருகை நிர்ணயிக்கப்பட்ட வகையில் இடம்பெற உள்ள நிலையில் ஜனாதிபதி தேர்லும் எவ்விதத்திலும் தொடர்புபடாது.
தேர்தலுக்கு ஆயத்தம்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு மூன்றாவது தடவையாக போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எமது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தேர்தலுக்கான ஆயத்த நடவடிக்கைகளை கடந்த சில நாட்களிலிருந்து மேற்கொண்டு வருகின்றது.
160 தேர்தல் தொகுதிகள் தயார் நிலையில்
பாராமன்றத்தில் பிரதிநிதித்துவம் படுத்தும் கட்சிகளில் 12 கட்சிகள் எம்மோடு உள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனநாயக மக்கள் முன்னணி உட்பட மூன்றோ நான்கு கட்சிகளாதான் தனியாக செயற்படுகின்றன. தற்போது ஜாதிக ஹெல உறுமயவுடன் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இன்னும் இரு தினங்களில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதோடு அதனுடைய ஆதரவையும் பெற முயற்சிப்போம். மேலும் ஜனாதிபதி தேர்தலுக்காக 11478 வாக்களிப்பு நிலையங்களில் 160 தேர்தல் தொகுதிகளில் தயாராக உள்ளன.
மக்களை ஏமாற்ற முடியாது
மேற்குலக நாடுகளுடன் சேர்ந்து சர்வதிகார ஜனாதிபதி முறைமையை அழிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதிகா ஜனாதிபதி முறைமை இருந்தமையினாலே இன்று நாட்டில் இருந்த பயங்கரவாதத்தை அழிக்க முடிந்ததோடு நாட்டை சகலத் துறைகளில் அபிவிருத்தி செய்ய முடிந்தது. இவ்வாறு பல நன்மைகளை பெற கூடியவர்களாய் இருக்கும் மக்களை எதிர்கட்சியினரால் ஏமாற்றிவிட முடியாது.
பொதுவேட்பாளரை தேர்தெடுக்க முடியாமல் தடுமாற்றம்
தேர்தலில் போட்டியிட பொதுவேட்பாளர் ஒருவரை தெரிவு செய்ய முடியாமல் எதிர்கட்சி காலம் கடத்தி வருகின்றது. 2005 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இவர்களுக்கு தெரியும் தேர்தல் நடைபெறும் என்று. ஆனால் இன்று வரை பொதுவேட்பாளரை தெரிவு செய்துகொள்ள முடியாமல் தத்தளிக்கும் எதிர்க் கட்சியினரை பொதுமக்கள் எவ்வாறு நம்புவர்.
ஜனாதிபதி மஹிந்தவுக்கே அமோக வெற்றி
எதிர்கட்சியினர் யாரை பொதுவேட்பாளராக நிறுத்தினாலும் கடந்த கால தேர்தல்களில் விட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த தேர்தலில் அமோக வெற்றியை பெறுவார் என்பது உறுதி என்றார்.

No comments:
Post a Comment