Thursday, November 13, 2014
இலங்கை::வடமாகாண முதலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை தவிர்த்து தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. எனவே அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தினார்.
இலங்கை::வடமாகாண முதலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை தவிர்த்து தான்தோன்றித்தனமாக செயற்பட முடியாது. எனவே அரசுடன் இணைந்து செயற்படுவதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அவருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ நேற்று சபையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற வரவு - செலவுத்திட்டத்தின் கைத்தொழில் வாணிபம் முதலீட்டு ஊக்குவிப்பு கூட்டுறவு உள்நாட்டு வர்த்தகம் ஆகிய அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் வடக்கில் கூட்டுறவுத்துறையின் வீழ்ச்சி குறித்து கருத்துக்களை முன்வைத்தார். மற்றும் கட்டிட வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையிலேயே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் இங்கு மேலும் கூறுகையில்,
வடமாகாண கூட்டுறவுத்துறை உள்ளிட்ட அனைத்து விடயங்களின் மேம்பாடுகள் குறித்தும் நாம் செயற்பட்டு வருகின்றோம். இவ்வேலைத்திட்டத்தில் வடமாகாண சபையும் இணைத்து செயற்படவேண்டும். இதற்கான அழைப்பினை விடுத்து வருகின்றோம். இணைத்துக்கொண்டும் செயற்படுவதற்கும் முயற்சிக்கின்றோம். எனினும் வடமாகாண முதலமைச்சர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதை தவிர்த்தே வருகிறார். இவ்விடயத்தில் அவர் தான் தோன்றித்தனமாக செயற்பட்டு வருகிறார்.
அவரால் அப்படி செயற்படமுடியாது. ஆகவே அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதற்கு வடமாகாண முதல்வருக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு அழுத்தம் கொடுக்க வேண்டும். நாம் இணைந்து செயற்படவே விரும்புகின்றோம். அவரிடம் அந்த எண்ணம் இல்லை என்றார்.
நாம் எமது முதலமைச்சருக்கு அழுத்தங்களை பிரயோகிப்போம் எனினும் அரசாங்கம் தனது பொறுப்புக்களை உணர வேண்டும்.
கடற்றொழில் வளத்துறை அமைச்சர் வடமாகாண சபையுடன் இணைந்து செயற்பட்டு வருகிறார். வடமாகாண சபையும் அவருடன் இணைந்து செயற்பட்டு வருவதை நான் இந்த சபையில் கூறியிருந்தேன்.
ஆகவே வடமாகாண சபை அரசுடன் இணைந்து செயற்பட தயாராக உள்ளது. ஆனால் அரசு வடமாகாண முதலமைச்சரையும் இணைத்துக்கொண்டு செயலாற்ற வேண்டும். எதிர்காலத்திலாவது இந்த முயற்சிகளை முன்னெடுங்கள் என்றார்.

No comments:
Post a Comment