Saturday, November 08, 2014
வாஷிங்டன்::ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க கூட்டு படைகள் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்த தாக்குதலில் அனைத்து நாடுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா அழைப்பு விடுத்துள்ளது. இதன் முதல் முயற்சியாக ஈரானின் மிக முக்கிய மத தலைவர் அயதுல்லா அலி காமினேனிக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடிதம் எழுதியுள்ளார்.
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் அமெரிக்க கூட்டு படை நாள்தோறும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. செப்டம்பர் மாதம் முதல் சிரியாவிலும், வான்வழி தாக்குதல் நடைபெற்று வருகிறது. எனினும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வான்வழி தாக்குதல் நடைபெறும் இடங்களில் இருந்து மற்ற பகுதிகளுக்கு ஊடுருவி வருகின்றனர். இந்த கூட்டுப்படை தாக்குதலில் சவுதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றன. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் த ங்களது பங்களிப்பை அளித்து வருகின்றன. எனினும் இத்தாக்குதலில் ஈரான் கலந்து கொள்ளாமல் ஒதுங்கியிருந்தது.
ஈராக்கில் ஊடுருவியுள்ள ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உள்ளிட்ட இஸ்லாமிய தீவிரவாதிகளை தரைவழி தாக்குதல் மூலம் அழிக்கும் பணியில் ஈரான் உதவ வேண்டும் என்று ஈரானின் மிக முக்கிய மத தலைவர் அயதுல்லா அலிகாமினேனிக்கு நேற்று முன்தினம் அமெரிக்க அதிபர் ஒபாமா முதல்முறையாக கடிதம் எழுதியுள்ளார். ஈராக்கில் ஐஎஸ்ஐஎஸ் தீ விரவாதிகளுக்கு எதிராக ஈரான் மேற்கொள்ள இருக்கும் ராணுவ தாக்குதலின் ப ோது அமெரிக்க ராணுவம் தலையிடாது. அது தன்னிச்சையாக செயல்பட உரிமை வழங்கப்படும் என்று வெள்ளை மாளிகை அதிகாரி ஜோஷ்எர்னல்ட் கூறினார். இந்த தாக்குதலின் போது உளவு தகவல்களை ஈரானுடன் அமெரிக்கா பகிர்ந்து கொள்ள விரும்பவில்லை என்று அமெரிக்க வெளியுறவு துறை வட்டாரங்கள் கூறுகின்றன.

No comments:
Post a Comment