Saturday, November 08, 2014
சென்னை::மக்கள் சிவில் உரிமை கழகதலைவராக இருந்து மறைந்தவர் வக்கீல் கே.ஜி.கண்ணபிரான். இவரது நினைவு சொற்பொழிவு சென்னை தியாகராயநகர் வித்யோதயா பள்ளியில் 9-ந்தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் இலங்கை வடக்கு மாகாண முதல் மந்திரி நீதிபதி சி.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டு, ‘பாதுகாப்பையும் இறையாண்மையும் காத்தல்‘ என்ற தலைப்பில் வக்கீல் கண்ணபிரானின் நினைவு சொற்பொழிவாற்றுகிறார். கண்ணபிரான் மற்றும் கண்ணபிரானுக்கு அப்பால் என்ற தலைப்பில் தென் ஆப்பிரிக்காவின் அரசமைப்பு நீதிபதியாக பணியாற்றிய சக்காரியா முகமது யாகூப் பேசுகிறார்.
மக்கள் சிவில் உரிமை கழக தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில தலைவர் பேராசிரியை சரஸ்வதி, கண்ணபிரானின் மனைவியும் எழுத்தாளருமான வசந்த், அகில இந்திய பொதுச்செயலாளர் வி.சுரேஷ், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பொதுச்செயலாளர் பாலமுருகன் உள்பட பலர் பேசுகிறார்கள்.

No comments:
Post a Comment