Tuesday, November 11, 2014
இலங்கை::சாவகச்சேரி - சங்கத்தானை ரயில் நிலையத்தில் பொருட்களை இறக்கிவிட்டு திரும்ப முற்பட்ட வேளை பிக்கப் வாகனம் ஒன்று ரயில் பாதையில் விழுந்து தடம்புரண்டது. இந்தச் சம்பவம் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற வேளை யாழ்ப்பாணம் நோக்கி ரயில் ஒன்று வரவிருந்தது என்றும், விபத்துக் குறித்து பளை தரிப்பு நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டு ரயில் அங்கேயே நிறுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் பொதுமக்கள், பொலிஸாரின் உதவியுடன் வாகனம் தண்டவாளத்தை விட்டு அகற்றப்பட்டு ரயில் போக்குவரத்து சுமுகமாக்கப்பட்டது.









No comments:
Post a Comment