Saturday, November 1, 2014

கொஸ்லந்தை மக்களுக்கு நேசக்கரம் நீட்டுவோம் Army Troops Use Sniffer Dogs for Detection of Human Remains in Meeriyabedda!

Saturday, November 01, 2014
இலங்கை::மீரியபெத்த மண்சரிவு காரணமாக தாய் தந்தையரை இழந்த பிள்ளைகள் எக்காரணம் கொண்டும் அவர்களது உறவினர்களிடம் ஒப்ப டைக்கப்பட மாட்டார்கள் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

அந்தப் பிள்ளைகளின் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் ஒப்படைக்கப்பட மாட்டார்கள். ஏனெனில் கடந்த சுனாமி அனர்த் தத்தின் போது பெற்ற அனுபவத்தைக் கொண்டே இந்த முடிவை அரசாங்கம் எடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதுவரை கணக்கெடுப்பின் படி 75 பிள்ளைகள் தாயையும் தந்தையையும் இழந்து நிர்க்கதியாகி நின்கின்றனர். இவர்களது உறவினர்கள் என்று சொல்வோரும், நெருங்கிய உறவினர்கள் என்று சொல்வோரும் இந்தப் பிள்ளைகளை கேட்கின்றனர். எனினும் அவர்களிடம் இப்பிள்ளைகளை ஒப்படைக்கப்படமாட்டார்கள்.
75 பிள்ளைகளின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு தங்குமிட வசதிகள் உள்ளிட்ட எதிர்காலம் அனைத்துக்கும் அரசாங்கமே பொறுப்பேற்கும். எவரது அனுசரணையையும் பெற்றுக் கொடுக்கும் எண்ணம் அரசுக்கு இல்லை. எனினும் இந்தப் பிள்ளைகளுக்காக உதவி வழங்க விரும்புகிறவர்கள் வழங்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

53 வீடுகளிலுள்ள சுமார் 330 பேர் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனினும் எடுக்கும் சரியான தரவுகளை கூற முடியவில்லை என செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது அமைச்சர் தெரிவித்தார்...

கொஸ்லந்த, ஹல்துமுல்ல, மீரியபெத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த அனைவருக்கும் நிரந்தர புதிய வீடுகளை கட்டிக் கொடுப்பது என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் கெஹெலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.

பாதுகாப்பான பிரதேசங்களை தேர்ந் தெடுத்து அவர்களுக்கான வீடுகள் கட்டிக் கொடுக்கும் நடவடிக்கை துரிதமாக முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் கெஹெலிய தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு நேற்று ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்ட வாறு தெரிவித்தார்.

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுப்பது அரசின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் நேற்று முன்தினம் மாலை அமைச்சரவை கூடிய போது மண்சரிவினால் உயிரிழந்தவர்களுக்காக இரங்கல் தெரிவிக்கப்பட்டதுடன், அமைச்சரவை தனது ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டுள்ளது.
அமைச்சரவையில் மீறியபெத்த மண்சரிவு சம்பவமே பிரதான இடத்தை வகித்ததுடன், நீண்ட நேரம் அந்த மக்களின் நிவாரணம், மீள்குடியேற்றம், வீடமைப்பு தொடர்பாக ஆராயப்பட்டது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தோட்ட மக்களுக்கு வரிசை வீடுகளுக்கு பதிலாக (லயன் குடியிருப்புகளுக்கு) நிரந்தர வீடுகளை பெற்றுக்கொடுப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருவதுடன், இதுவரை தோட்ட மக்களுக்காக சுமார் ஒரு இலட்சம் வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன என்றும் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்தார்.

தோட்ட வீடமைப்புக்காக ஒரு குடும்பத்துக்கு 6 பேர்ச்சஸ் காணி வழங்கப்படுவதுடன், வீடமைப்பு அமைச்சின் ஊடாக ஒரு இலட்சம் ரூபாவும், பிரதேச செயலாளர் ஊடாக 50,000 ரூபாவும் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தோட்ட வீடமைப்புக்கு மேலதிகமாக இரண்டு இலட்சம் ரூபாவை கடனாக வழங்க தீர்மானித்துள்ளதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, கொஸ்லந்த, மீரியபெத்த பகுதியில் குறித்த தோட்ட குடியிருப்புகளிலிருந்து மக்களை வெளியேறுமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அறிவுறுத்தலுக்கமைய தோட்ட நிர்வாகம் கூறியதாகவும் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர்.
ஆனால் மற்றொரு சாரார் தோட்ட நிர்வாகம் எங்களை அறிவுறுத்தவில்லை என்கின்றனர். 2005 ஆம் ஆண்டே இந்தப் பகுதி மண்சரிவு அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டு அறிக்கை சமர்ப்பிக் கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் இவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகளை அமைத்து அங்கு செல்லுமாறு கூறியும் அவர்கள் செல்லவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறது. மக்களோ கட்டித்தரப்பட்ட வீடுகளில் குடியிருக்க தகுதியற்றவை என்றும் சிலர் வீடுகள் கட்டவே இல்லை என்றும் கூறுகின்றனர்.

எனவே, இதன் பின்னணியில் உள்ள உண்மை நிலையை கண்டறிவதற்கு அனைத்துத் தரப்பினரையும் தீவிர விசாரணைக்குட்படுத்தி தமக்கு முழுமையான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த விசாரணைகளின் அடிப்படையில் எவரேனும் குற்றவாளிகளாக காணப்பட் டால்? என செய்தியாளர் ஒருவர் கேட்ட போது,

அவர்களுக்கு எதிராக நாட்டில் தற்போது நடைமுறையிலுள்ள சட்ட வரையறைக்குள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.
அத்துடன் பெருந்தோட்டங்கள் அனைத்தும் தனியாருக்கு வழங்கப்பட்டாலும் அந்தத் தோட்டங்களில் அரசுக்கு 10 வீதம் ‘கோல்டன் செயார் (தங்கபங்கு) உள்ளது. இதனடிப்படையில் பெருந் தோட்டத் தொழிலாளர்களின் பாதுகாப்பு, நலன்கள் விடயத்தில் அக்கறை செலுத்தாத தோட்டங்களை மீண்டும் அரசுடமையாக்க முடியும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

துளை மாவட்டத்தில் மண் சரிவு ஏற்பட்ட ஹல்துமுல்ல, மீரியாவத்தை கொஸ்லந்த கிராமங்களில் பாதிக்கப்பட்ட சகல வீடுகளையும் ஜனசெவன வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மீள் நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

இதன்பொருட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைமைக் காரியாலயத்தின் பொறியியல் பிரிவு மற்றும் பதுளை மாவட்டக் காரியாலய அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பிரதேசங்களுக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர். இக் குழு சேதம டைந்த வீடுகள் பற்றிய கணக்கெடுப்புக்களை எடுத்து வருகின்றது.
அத்துடன் வீடுகளை மீள நிர்மாணிப் பதற்காக கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தினால் பரிசீலிக்கப்படவுள்ளது. இயற்கை அனர்த்தம் ஏற்படாத பாதுகாப்பான அரச காணிகளை அடையாளம் கண்டு பரிசீலிக்குமாறு அமைச்சர் விமல் வீரவன்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இம் மக்களுக்கான தற்காலிக வீடுகளும் நிர்மாணிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

லயன் அறைகள் அடங் கிய 70 வீடுகள், 3 சனசமூக நிலையம், பாலர் பாடசாலை, கோவில் மற்றும் அடிப்படை வசதிகளும் அனர்த் தத்தினால் சேதமடைந்துள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உயிர் உடைமைகளையும் இழந்து தவிக்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொஸ்லந்த சம்பவத்தினால் காணாமல் போனதாக சந்தேகிக்கப்படும் தொகை எதிர்பார்க்கப்பட்ட அளவை விட குறைவானதென்றும் தேவையான ஆவணங்கள் நாசமடைந்துள்ளதால் சரியான தொகையை உறுதி செய்வதில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட சகலருக்கும் நிரந்தர வீடுகளை அரசாங்கம் நிர்மாணிக்க இருப்பதாக குறிப்பிட்ட அவர் இந்த சம்பவத்தை பயன்படுத்தி பணம் திரட்டும் போலி நபர்களிடம் ஏமாற வேண்டாம் எனவும் கூறினார். இந்த மக்கள் தொடர்பில் தோட்ட கம்பனிகள் போதுமான பங்களிப்பு செய்யவில்லை என்று குறிப்பிட்ட அமைச்சர், தோட்ட கம்பனிகளினூடாக பாதுகாப்பான வீடுகள் கட்டிக்கொடுப்பதற்காக சட்ட ஒழுங்குகள் முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.

கொஸ்லந்த சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விசேட அறிவிப்பொன்றை வெளியிட்ட அவர் வேறு தோட்டத்துக்கு சென்ற தொழிலாளர் குழுவொன்று திரும்பி வந்துள்ளதாகவும் இங்கு 32 பேர் வாழ்ந்த போதும் முகாம்களில் 1000 பேர் இருப்பதாகவும் கூறினார். மேலும் தெரிவித்த அமைச்சர்,

கொஸ்லந்த சம்பவம் நடைபெற்ற நாள் முதல் ஆளும் தரப்பு எதிர் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றனர். மோசமான காலநிலை மற்றும் குறித்த மழையில் மீண்டும் மண்சரிவு ஏற்படும் அபாயம் என்பவற்றையும் கருத்திற் கொண்டே மீட்புப் பணிகள் முன்னெ டுக்கப்படுகின்றன.

450 இராணுவத்தினரும் 50 விமானப்படையினரும் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் நடந்த போது 75 மாணவர்கள் பாடசாலை சென்றிருந்ததோடு சிலர் வேறு தோட்டங்களுக்கு

No comments:

Post a Comment