Tuesday, October 21, 2014

பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச புதுடெல்லியில் இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜேட்லியை சந்தித்துப் பேச்சு!

Tuesday, October 21, 2014
புதுடெல்லி::மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ச, நேற்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் அருண்ஜேட்லியை  சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
 
இச்தச் சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்ற பின்னர் கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ள முதலாவது இந்திய பயணமென்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனனின் அழைப்பின்பேரில் டெல்லி வந்துள்ள கோத்தபாய,அருண்ஜேட்லியுடனான சந்திப்பைத் தொடர்ந்து இன்று மத்திய அரசின் மேலும் சில தலைவர்களைச் சந்தித்து பேசவுள்ளார்.

இலங்கை -இந்திய நாடுகளுக்கிடையிலான ராணுவ ஒத்துழைப்புக்களை வலுப்படுத்திக்கொள்வது உட்பட, இரு நாடுகளுக்கிடையிலான ராணுவப் பயிற்சிகள் உள்ளிட்ட பாதுகாப்பு உறவுகள் தொடர்ந்து பேணப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர்,கோத்தபாயவுக்கு தெளிவுபடுத்தியதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தமிழக மீனவர் பிரச்னையை தீர்ப்பதற்கான ஒன்றிணைந்த நடவடிக்கைகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


தமிழகத்தின் எதிர்ப்புகளினால் இரு நாடுகளுக்கடையிலான பாதுகாப்பு உறவுகள் பாதிக்கப்படாதென்ற உத்தரவாதத்தை,இலங்கைக்கு இந்தியா வழங்குமென்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

No comments:

Post a Comment