Tuesday, October 21, 2014

புலிகள் மீதான தடையை நீக்கினால் அதனை பயன்படுத்தி புலிகள் வடக்கில் இன்னொரு யுத்தத்தை ஆரம்பிக்கலாம்: சுசில் பிரேமஜயந்தவே!

Tuesday, October 21, 2014
இலங்கை::ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற தீர்ப்பினால் இலங்கையில் யுத்தம் உருவாக கூடிய சூழ்நிலை குறித்து அச்சம் வெளியிட்டுள்ளார்.

 நீதிமன்ற தீர்ப்பு காரணமாக ஐரோப்பிய ஒன்றியம்  புலிகள் மீதான தடையை நீக்கினால் அதனை பயன்படுத்தி புலிகள் வடக்கில் இன்னொரு யுத்தத்தை ஆரம்பிக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு யுத்தத்தை தடுக்க வேண்டிய கடமை அரசாங்கத்திற்க்கு உள்ளது, அதற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டி உள்ளது, என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய நீதிமன்ற தீர்ப்பு விவகாரத்தை வெளிவிவகார அமைச்சு கையாள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புலிகள் சார்பு புலம்பெயர் அமைப்புகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தீவிரமாக செயற்படுகின்றன,அவையே தடை நீக்கத்திற்கான அழுத்தத்தை கொடுத்தன,

ஐக்கிய தேசிய கட்சி புலிகள் சார்பு புலம்பெயர் அமைப்புகளுடன் தொடர்புகளை வைத்துள்ளது, இதுவே இறுதியில் தடைநீக்கத்திற்க்கு வழிவகுத்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment