Saturday, October 11, 2014
ஆட்சி மாற்றமொன்றுக்காக சர்வதேச மட்டத்தில் சதி நடைபெறும் அதேவேளை தனது தேர்தல் நடவடிக்கைகளுக்காக எதிர்க் கட்சித் தலைவர் டயஸ்போராக்க ளுடன் ஜெர்மனி மற்றும் பிரான்ஸில் ரகசிய பேச்சு நடத்தியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
இது தொடர்பிலான புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் இதற்கு முன்னரும் இவ்வாறான சதிகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,புலிகளின் டயஸ்போராக்கள் தமது தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்காகவே செயற்படுகின்றன. நாட்டை துண்டாடவே முயல்கின்றன. ஆனால் தமிழ் மக்களின் அபிலாசைகள் வேறுவிதமானவை. அவர்கள் தமது காணி பிரச்சினை தீர வேண்டும் எனவும் அன்றாட வாழ்வு சுமுகமாக அமைய வேண்டும் எனவும் விரும்புகின்றனர்.
போக்குவரத்து மற்றும் வசதிகள் குறித்தே அவர்கள் சிந்திக்கின்றனர். அந்த மக்களின் தேவைகளை முடிந்தளவு நிறைவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால் தமது தேர்தல் செயற்பாடுகளுக்கு உதவுமாறு ரணில் விக்ரமசிங்க டயஸ்போராக்களிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தமது சந்திப்பு குறித்த படங்களையும் தகவலையும் வெளியிடாமல் மறைக்க அவர் முயன்றாலும் எம்மிடம் அது பற்றிய ஆதாரங்கள் இருக்கின்றன.
யுத்த காலத்திலும் சில நாடுகள் எம் மீது அழுத்தம் பிரயோகித்தன. யுத்தத்தை நிறுத்தம் பல வழிகளிலும் முயன்றன. பொதுநலவாய மாநாட்டிற்காக இங்கு வந்த பிரித்தானிய பிரதமர் டயஸ் போராவின் பிரசாரத்தையே மேற்கொண் டார் என்றார்.
அடுத்த தேர்தல் குறித்தும் பொருட் களின் விலைகள் குறைக்கப்படுவது பற்றியும் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர்.
தேர்தலைக் கருத்திற்கொண்டு பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வில்லை. அடுத்த வருட முதற் பகுதியில் பிரதான தேர்தலொன்றை நடத்துவது குறி த்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வாழ் க்கைச் செலவு தொடர்பில் ஜனாதிபதி யினால் நியமிக்கப்பட்ட அமைச்ச ரவை உப குழு, வாழ்க்கைச் செலவு குறித்து மட்டுமன்றி நிர்வாக விடயங் கள், சம்பளம், பதவி உயர்வு உட்பட பல அம்சங்கள் பற்றி ஆராய்ந்து வரு கிறது. இதன் பரிந்துரைகளும் கவன த்திற் கொள்ளப்பட்டு பொருட்களின் விலைகள் குறைக்கப்படுகின்றன. பொருட்களின் விலை குறைப்பிற்கு அரசியல் நோக்கம் கிடையாது.

No comments:
Post a Comment