Tuesday, October 21, 2014
இலங்கை::தமிழ் அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விட வேண்டுமாம். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப் போகிறாராம் அனந்தி. இவரால் கடத்திக் காணாமல் போன பல இளைஞர்களின் உறவினர்கள் இவருக்கு எதிராக முல்லைத்தீவில் தொடர் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர் அரசியல் கைதிகளுக்கா ஆர்ப்பாட்டம் நடத்தப் போகிறாராம். ஏட்டாம் பாராளுமன்றத் தேர்தல் வரவிருப்பதால் அதில் ஒரு கண் வைத்துள்ள அம்மணி அறிக்கை விட்டுள்ளார். அனந்தி நன்றாக அரசியல் படித்துவிட்டார் என்பது மட்டும் நிஜம்..
* அறிக்கை வர முன்னரேயே யாழிற்கு சென்ற யாழ்தேவி
யாழ்தேவி வெற்றிகரமாக ஓடத் தொடங்கிவிட்டது. என்ன இன்னமும் அறிக்கை விடும் அந்த மக்கள் முன்னணிக் கட்சியிலிருந்து ஒரு அறிக்கையையும் காணவில்லையே, ஒருவேளை திருந்தி விட்டார்களோ என நினைத்துக் கொண்டிருக்கையில் ஒரு எதிர்ப்பு அறிக்கை வாடிக்கையான ஊடகங்களில் வழமைபோல் வந்துவிட்டது.
விசாரித்துப் பார்த்ததில் அந்த அரசியல்வாதியான வர்த்தகப் பிரமுகரின் அறிக்கை எழுதும் முதியவர் ஊருக்குச் சென்று விட்டாராம். அதனால்தான் தாமதமாம். அதற்குள் யாழ்தேவி வடக்கு நோக்கிச் சென்றுவிட்டது.
* அரியத்தாரின் அறிக்கையை பார்த்து அழுவதா சிரிப்பதா?
ஜனாதிபதி தேர்தலில் தீர்மானிக்கும் சக்தியாக தமிழ்க் கூட்டமைப்பு இருக்கப் போகிறதாம். இதனால் அரசாங்கம் பயப்படுகிறதாம். அரியநேந்திரத்தாரின் இந்த அறிக்கையை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. காதில பூ கந்தசாமி கதை பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் இவர் கூறும் கதையோ பூவில கந்தசாமி போலுள்ளது. ஜனாதிபதி யாழ்ப்பாணம் போனபோது திரண்ட சனத்தைப் பார்த்த பின்னும் இவருக்கு இதுபோன்ற அறிக்கை தேவைதானா?



No comments:
Post a Comment