Tuesday, October 21, 2014

அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப் போகின்றாராம்: (புலி)கூட்டமைப்பின் மாவையார்!!

Tuesday, October 21, 2014
இலங்கை::அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப் போகின்றாராம்: (புலி)கூட்டமைப்பின் மாவையார்!!
 
அரசாங்கத்துக்கு காலக்கெடு விதிப்பதில் கூட்டமைப்புத் தலைவர்கள் கைதேர்ந்தர்வர்கள். வெறுமனே காலக்கெடுவுடன் இவர்கள் நிற்பதில்லை. உரிய காலத்திற்குள் கோரிக்கையை நிறைவேற்றாமல் விட்டால் அரசாங்கம் பாரதூரமான விளைவுகளை சந்திக்க வேண்டுமென்று சில காலத்துக்கு முன் ஒரு தலைவர் எச்சரிக்கை விட்டார். அந்தக் காலக்கெடு முடிந்து நீண்ட நாட்கள் கழிந்து விட்ட நிலையிலும் எந்த பாரதூரமான விளைவையும் அரசாங்கம் சந்திக்கவில்லை. எச்சரிக்கை விட்ட தலைவர் வாய் திறக்கவில்லை.
 
இப்போது மாவையார் காலக்கெடு விதித்திருக்கிறார். வருட முடிவுக்குள் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வை முன்வைக்காவிட்டால் சாத்வீகப் போராட்டம் ஆரம்பிக்கப் போகின்றாராம். இந்தக் காலக் கெடுவில் இரண்டு விடயங்கள் கவனத்தை ஈர்க்கின்றன. தமிழ் மக்களின் தலைவர்கள். என்று உரிமை கோருபவர்கள் அந்த மக்களுக்கான அரசியல் தீர்வுக் கோரிக்கையை முன்வைக்க வக்கில்லாமல் அரசாங்கமே தீர்வை முன்வைக்க வேண்டும் என்று கூறுவது வெட்கங்கெட்ட அரசியல். அடுத்ததாக, சாத்வீகப் போராட்டம் என்றால் கொஞ்ச நேரம் குந்தியிருந்துவிட்டு எழும்புவதா அல்லது தொடர் சத்தியாகிரகமும் சட்டமறுப்புமா என்பது விளங்கவில்லை.
 
இந்த ஸ்டன்ட் அரசியல் பாணியில் வட மாகாண சபையும் இப்போது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கின் றது. இந்த வருட இறுதிக்குள் வடக்கில் தனியார் காணி களில் நிலைகொண்டுள்ள படையினர் முழுமையாக வெளியேறிவிட வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். அந்த தீர்மானம் பற்றிக் கூறுவதற்கு முன் அது நிறை வேற்றப்பட்ட கால முக்கியத்துவத்தைப் பார்ப்போம்.
 
ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் என்பது தெரிந்த நிலையிலேயே இத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. ஜனாதிபதியின் வருகையை பகிஷ்கரிக்கும் போது மக்களின் கவனத்தை காணிப் பிரச்சினைக்குத் திசைதிருப்புவதே இதன் நோக்கம். ஜனாதிபதியின் வருகையை கூட்டமைப்பு பகிஷ்கரிப்பதொன்றும் புதுமையல்ல கட்சி காலத்திலிருந்து தமிழ் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான அரசியலையே முன்னெடுத்து வருகின்றார்கள். ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வருகின்ற வேளையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் வருகையைப் பகிஷ்கரிப்பதன் மூலம் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சிக்கு விசுவாசம் தெரிவிப் பதை விளங்கிக் கொள்ளலாம். ஆனால் அதற்குச் சொல்லிய காரணங்களை விளங்கிக் கொள்ள முடியவில்லை.
 
தனது கோரிக்கைகளை ஜனாதிபதி நிறைவேற்றாத படியால் அவரது தலைமையில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலி பங்குபற்றப் போவதில்லை என்றார் முதலமைச்சர் விக்னேஸ்வரன். ஆளுநரையும் பிரதம செயலாளரையும் மாற்ற வேண்டும் என்பதே அவரது கோரிக்கை. இவ்விருவரையும் மாற்றுவது தான் இப்போது தமிழ் மக்களுக்கு உள்ள முக்கிய பிரச்சினையா? தமிழ் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண எடுக்கும் நடவடிக்கைகளை இவ்விருவரும் தடுத்துக் கொண்டிருக்கிறார்களா? அப்படியானால் எந்தெந்த நடவடிக்கைளை என்ன விதத்தில் தடுத்தார்கள் என்று ஆதார பூர்வமாக கூறலாமே. அப்படிச் சொல்வதற்கு எதுவும் இல்லை என்றால் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையின் நியாயம் என்ன? இவ்விரு பதவிகளும் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவை.
 
இவ்விருவரின் இடத்துக்கு வேறு இருவரை நியமிப்பதாக இருந்தாலும் அதையும் ஜனாதிபதிதான் செய்யவேண்டும். அவர்களையும் மாற்றச் சொல்லிக் கேட்பீர்களா? மேடை சரியில்லை என்று சாட்டுச் சொல்லாமல் ஆட்டத்தைக் கவனியுங்கள். வடக்குக்கு அளித்த வாக்குறுதிகளை ஜனாதிபதி நிறைவேற்றவில்லை. என்றும் முதலமைச்சர் சொல்கிறார். ஐயா, ஜனாதிபதியின் வாக்குறுதிகளை விடுங்கள். மாகாண சபை தேர்தல் காலத்தில் வட மாகாண மக்களுக்கு நீங்கள் அளித்த வாக்குறுதிகளுள் எதை நிறைவேற்றியிருக்கின்ஹர்கள்? அரசியல் காரணத்துக்காக ஜனாதிபதியின் வருகையை பகிஷ்கரித்தோம் என்று வெளிப்படையாக சொல்லுங்கள் நொண்டிச்சாட்டுகள் எதற்கு?
 
இவர்கள் ஜனாதிபதியின் வருகையை மாத்திரம் பகிஷ்கரிக்கவில்லை. இரண்டாயிரத்துக்கு அதிகமானவர்களுக்குக் காணி உறுதி கையளித்ததையும் பகிஷ்கரித்தனர். புலி களின் வங்கியில் வைப்புச் செய்து தொலைந்து போனதாகக் கருதிய நகைகளை உரியவர்களிடம் கையளித்ததைப் பகிஷ்கரித்தார்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கியதைப் பகிஷ்கரித்தார்கள். யாழ்தேவி சேவை யாழ்ப்பாணம் வரை நீடித்ததைப் பகிஷ்கரித்தார்கள். பாடசாலைகளைக்கும் வைத்தியசாலைகளுக்கும் புதிய கட்டங்கள் திறந்து வைத்ததைப் பகிஷ்கரித்தார்கள். சுருக்கமாகச் சொல்வதானால் சகல நல்ல காரியங்களையும் பகிஷ்கரித்தார்கள்.
 
மாகாண சபையின் தீர்மானத்துக்கு வரு வோம். இவர்கள் விதித்த காலக்கெடு வுக்குள் படை யினர் வெளி யேறா விட்டால் என்ன செய் யப் போகின்றா ர்கள்? ஒன்றுமே செய்யப்போவ தில்லை. வெவ் வேறு வடிவங் களில் மீண்டும் மீண்டும் கோரி க்கை வைப்பதோடு நின்றுவிடுவார்கள். தனியார் காணிகளி லிருந்து படையி னரை வெளியேற் றும் நோக்கத்தோடு இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றவில்லை. காணிப் பிரச்சினையை முன்னிலைப்படுத்தித் தங்கள் அரசியலைத் தடங்கலின்றி கொண்டு நடத்துவது தான் இவ ர்களின் தேவை. இவர் களின் திசைதிருப்பு அர சியல் இப்போது காணப் பிரச்சினையிலேயே தங்கியு ள்ளது.
 
இனப் பிரச்சினையிருந்தும் அதற்கான தீர்விலிருந்தும் தமிழ் மக்களின் கவனத்தைத் திசைதிருப்பி வேறு ஏதாவதொரு பிரச்சினையில் அக்கறை கொள்ள வைக்கும் தந்திரோபாயத்தை தமிழ்த் தலைவர்கள் நீண்ட காலமாகப் பின்பற்றி வருகின்றார்கள். முதலமைச்சராக இருந்தாலென்ன வேறொரு தலைவராக இருந்தாலென்ன இனப்பிரச்சினையின் தீர்வு பற்றி எப்போதாவது பேசியிருக்கிறார்களா? பேச மாட்டார்கள். இனப்பிரச்சினை தீராமலிருந்தால் தானே அதை வைத்து எப்போதும் இவர்கள் வண்டி ஓட்டலாம். இப்போது காணிப்பிரச்சினை கை கொடுக்கின்றது.
 
தனியார் காணிகளில் படையினர் நிலைகொண்டிருப் பது பற்றிய புள்ளிவிபரங் களையும் வரைபடங்களையும் முதலமைச்சர் மாகாண சபையில் சமர்ப்பித்திருக்கின்றார். யுத்தத் தின் உச்சக்கட்டத்தில் படையினர் வசமிருந்த தனியார் காணிகள் மற்றும் வீடுகள் பற்றிய புள்ளிவிபரத்தையும் இப்போது படையினர் வசமுள்ள தனி யார் காணிகள் மற்றும் வீடுகள் பற்றிய புள்ளிவிபரத்தையும் தனித்தனியாக சமர் ப்பித்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். கணிசமான காணிகளும் வீடுகளும் உரிய வர்களுக்குக் கையளிக்கப் பட்டிருப்பதை மாகாணசபை உறுப்பினர்கள் அறிய முடிந்திருக்கும். இவ்வாறு கையளிக்கப்பட்ட காணிகள் மற்றும் வீடுகள் பற்றிய விபரத்தை மாகாண எதிர்க்கட்சித் தலைவர் மாகாண சபைக் கூட்டமொன்றில் தெரிவித்திருக்கின்றார்.
 
இவற்றுள் ஒரு அங்குலக் காணியையாவது ஒரு வீட்டையாவது மீட்டுக் கொடுத்ததில் கூட்டமைப்பினரின் ஏதாவது பங்களிப்பு இருக்கின்றதா? எதுவுமே இல்லை.
படையினரின் வசமுள்ள காணிகள் தொடர்பாகக் கூட்டமைப்பினர் மணித்தியாலய ஆர்ப்பாட்டம் செய்வதையும் பத்திரிகைகளில் படம் வரப்பண்ணுவதையும் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஆர்ப்பாட்டங்களில் பங்குபற்றி ஆக்ரோசமாகப் பேசுவது வாக்குகளுக்குப் போதும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மிக அமைதியாகப் படையினர் வசமுள்ள காணிகளைக் கொஞ்சம் கொஞ்சமாக உரிய வர்களுக்கு பெற்றுக் கொடுத்துக் கொண்டி ருக்கிறார்.
 
தங்கள் காணிகள் எங்கே உள்ளன என்பது பற்றி எதுவும் தெரியாமல் வெளிநாடுகளிலும் வேறு இடங்களிலும் வசிப்பவர்களுக்குச் சொந்தமான காணிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் மக்கள் இன்று பிரச்சினையை எதிர்நோக்குகின் றார்கள். இக் காணிகளிலிருந்து அவர் களை வெளியேற்றும் முயற்சி நடை பெறுகின்றது. இந்த மக்களின் சார்பில் வட மாகாண சபை ஒரு தீர்மானத்தை நிறைவேற்றுமா?

No comments:

Post a Comment