Sunday, October 12, 2014
வடக்கு மாகாண முதலமைச்சரையும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினரையும் அரசாங்கத்தின் இடதுசாரி அமைச்சர் டியு குணசேகர கண்டித்துள்ளார்.ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் யாழ்ப்பாண விஜய நிகழ்வுகளில் பங்கேற்பதில்லை என்று எடுத்துள்ள தீர்மானம். தொடர்பிலேயே இந்த கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது. யாழ்தேவி புகையிரத சேவையை யாழ்ப்பாணம் வரையும் நீடிப்பது மற்றும் ஏனைய நலன்புரி திட்டங்களுக்காக ஜனாதிபதி வடக்குக்கு விஜயம் செய்கிறார். இது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப இடம்பெறும் நிகழ்வுகளாகும். இவற்றுக்கு வரவேற்பை வழங்காமல் ஜனாதிபதியின் நிகழ்வை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நிராகரிப்பது ஏற்றுக்கொள்ளத்தக்க கூடியதல்ல என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:
Post a Comment